கண்டி பிரதேச ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற திருமண நிகழ்வுகளில் கலந்து கொண்டதாக கூறப்படும் சுமார் 600 பேர் திடீரென சுகவீனமடைந்துள்ளதாக கங்கவத்தகோரளை பிரதேச சபையின் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன் அந்த ஹோட்டலில் மூன்று திருமணங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில் அந்த மூன்று திருமணங்களிலும் கலந்து கொண்ட சுமார் அறுநூறு பேர் வாந்தி, பேதி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளர்.
இதனையடுத்து அவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது . இது தொடர்பில் கங்கவத்தகோரளை உள்ளுராட்சி சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்,
பரிசோதனைக்கு சென்ற நீர்
ஹோட்டலில் உணவு உண்டவர்களுக்கு ஒருவித ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. ஹோட்டலின் நீரால் இவ்வாறு ஒவ்வாமை ஏற்பட்டிருக்கக்கூடும் என ஊகிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் ஹோட்டலின் நீர் மாதிரிகள் மேலதிக பரிசோதனைகளுக்காக பேராதனை பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.