துப்புரவு தொழிலாளியை அச்சுறுத்தி 415 ரூபாவை கொள்ளையிட்ட 6 மாணவர்கள் கைது!

பாணந்துறை கடற்கரை துப்புரவு பணியாளர் ஒருவரின் பணத்தைக் கொள்ளையடித்த குற்றச்சாட்டில் பாடசாலை மாணவர்கள் 6 பேரை கைது செய்துள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர். மொரட்டுவ பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய பாடசாலை மாணவர்கள் குழுவே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளது. பொதுக்கழிப்பறை அருகே 3... Read more »

புதிய ஜனநாயக முன்னணி சிலிண்டர் சின்ன தேசியப்பட்டியல் எம்பிக்களாக ரவியும், தினேசும் !

புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியல் உறுப்பினர்களாக முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோரை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த முன்னணியிலிருந்து மூன்று எம்.பிக்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இருவர் தேசியப்பட்டியல் மூலம் நியமிக்கப்படவுள்ளனர். இந்த முன்னணி ரவி... Read more »
Ad Widget

புதிய அமைச்சரவை எப்போது நியமனம்?: வெளியானது அறிவிப்பு

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை எதிர்வரும் 18ஆம் திகதி நியமிக்கப்பட உள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் சார்பில் அனுராதபுரம் மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் 21ஆம் திகதி புதிய நாடாளுமன்றம் கூடவுள்ளது. அதன் பின்னர் எமது பணிகள் விரைவாக தொடங்கப்படும். அபிவிருத்தியடைந்த... Read more »

பிரதம நீதியரசராக முர்து பெர்னாண்டோ

பிரதம நீதியரசராக முர்து பெர்னாண்டோவை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்றிரவு (15) நடைபெற்ற அரசியலமைப்பு பேரவை கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. Read more »

பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினர்: நாமல்

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின் படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ பதவிப் பிரமாணம் செய்ய உள்ளார். இன்று சனிக்கிழமை (16.11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கட்சியின் பொதுச் செயலாளர்... Read more »

அரசியலில் இருந்து ஓய்வு பெறுகின்றேன்: மஹிந்தானந்த அளுத்கமகே

அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றை இன்று (16) ஏற்பாடு செய்து அவர் இதனை தெரிவித்துள்ளார். தனது சேவை கண்டி மாவட்ட மக்களுக்கு இனி தேவையில்லை என்பதை இம்முறை நடைபெற்ற பொதுத்தேர்தல் நிரூபித்துள்ளதாக அவர் மேலும்... Read more »

பாரம்பரிய தமிழ் கட்சிகளுக்கு சவால்

பொதுத் தேர்தலில் வடக்கு மாகாணத்தில் உள்ள இரண்டு தேர்தல் மாவட்டங்களையும் தேசிய மக்கள் சக்தி வெற்றிக்கொண்டுள்ளதுடன், 5 ஆசனங்களையும் கைப்பற்றி புதிய வரலாறு படைத்துள்ளது. பிரதான தேசியக் கட்சியொன்று பொதுத் தேர்தலில் வடமாகாணத்தை வெற்றிக்கொண்டுள்ளமை இதுவே முதல் சந்தர்ப்பமாகும். 2001ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக்... Read more »

மதுபான விருந்தில் ஏற்பட்ட வாக்குவாதம்: நபர் ஒருவர் அடித்துக் கொலை

புத்தளம், சாலியவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யாய பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை கொலை சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து அறையின் கதவை உடைத்து அங்கிருந்த நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் தடியொன்றினால் தாக்கியே குறித்த நபரை கொலை... Read more »

புதிய சபாநாயகர் பிமல் ரத்நாயக்க: சபை முதல்வர் விஜித ஹேரத்

பத்தாவது நாடாளுமன்றத்தின் சபாநாயகராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்கவை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. பிமல் ரத்நாயக்க தேசிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியலை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்திற்கு பிரவேசிக்க உள்ளார். நாடாளுமன்றத்தில் சபைத் தலைவராக அமைச்சர் விஜித ஹேரத்தை நியமிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம்... Read more »

தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒன்றுபடுத்த முயற்சி: சிவகரன்

எதிர்வரும் நாள்களில் தமிழ்த் தேசியக் கட்சிகளை ஐக்கியப்படுத்தும் முயற்சியில் ஈடுபட இருப்பதாகத் தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கம் அறிவித்திருக்கின்றது. இது தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் வி.எஸ். சிவகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தமது உத்தேச முயற்சி பற்றிக் குறிப்பிட்டிருக்கின்றார். அதில் கூறப்பட்டுள்ளவை வருமாறு:-... Read more »