வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு புதிய அறிவிப்பு!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் வசதிக்காக வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களில் இருந்து பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் நகல்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதன்படி இதன்முன்னோடி திட்டமாக தெரிவு செய்யப்பட்ட 7 வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரக பொது அலுவலகங்கள் ஊடாக... Read more »

‘கண்டியில் வர்த்தகருக்குச் சொந்தமான டிபென்டர் கைப்பற்றப்பட்டது!

சட்டவிரோதமான முறையில் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் டிஃபென்டர் ரக ஜீப் ஒன்று கண்டியில் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள வர்த்தகர. ஒருவரே இந்த ஜீப்புக்கு உரிமையாளர் என்பது விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. மேலதிக விசாரணைகளை கண்டி தலைமையக பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். Read more »
Ad Widget

உங்களுடன் இணைந்து விழுமியங்களைப் பாதுகாப்போம்!’ நாமல் வாழ்த்து!

பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றியீட்டியதற்காக தேசிய மக்கள் சக்திக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷ தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தனது X கணக்கில் பதிவிட்டுள்ள நாமல் ராஜபக்க்ஷ, இந்த முக்கியமான பயணத்துக்கு அநுரகுமார திஸாநாயக்க மற்றும் தேசிய மக்கள் சக்திக்கும்... Read more »

முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியல் வெளியான தகவல்!

தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்கு உள்வாங்கப்படுவோர் தொடர்பில் (17) தமது கடசி தீர்மானிக்கவுள்ளதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பர் தமிழ் லீடருக்கு தெரிவித்தார். நாளை மாலை தமது கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் முக்கியஸ்தர்கள் கூடி இது தொடர்பில்... Read more »

புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் நாளை பதவிப்பிரமாணம்

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர்கள் நாளை(18) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளனர். இந்த நிகழ்வு நாளை(18) காலை 10 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது. Read more »

IMF குழு இலங்கை வருகை

பொருளாதார மறுசீரமைப்பு திட்டத்தின் மூன்றாவது மதிப்பாய்வை மேற்கொள்வதற்காகச் சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று இன்று இலங்கைக்கு வருகைத் தரவுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நாணய நியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர் தலைமையில் இந்த குழு இலங்கை... Read more »

மேலதிக வகுப்புகளுக்கு தடை

2024ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையுடன் தொடர்புடைய கருத்தரங்குகள், மேலதிக வகுப்புகள் மற்றும் கலந்துரையாடல்களுக்கு எதிர்வரும் 19ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. உயர்தரப் பரீட்சை நவம்பர் 25 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையிலேயே பரீட்சைகள் திணைக்களம் இந்த தடை உத்தரவை அறிவித்துள்ளது. Read more »

தேசிய மக்கள் சக்தி ஊடாக நாடாளுமன்றுக்கு பிரவேசிக்கும் 16 பெண் பிரதிநிதிகள்!

பொதுத் தேர்தலில் ஏறக்குறைய 20 பெண்கள் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் தேசிய மக்கள் சக்தியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பது விசேட அம்சமாகும். அந்தவகையில், தேசிய மக்கள் சக்தி சார்பாக கலாநிதி ஹரிணி அமரசூரிய கொழும்பு மாவட்டத்தில் 655,289 வாக்குகளை பெற்று நாடாளுமன்றம் செல்லவுள்ளார்.... Read more »

எம்.பி ஆகிறார் திலித் ஜயவீர

சர்வஜன அதிகாரம் கட்சிக்கு கிடைக்கப் பெற்ற தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவிக்கு கட்சியின் தலைவர் தொழிலதிபர் திலித் ஜயவீர நியமிக்கப்பட்டுள்ளார். இதனை சர்வஜன அதிகார உயர்பீட குழு தீர்மானித்துள்ளதுடன், அது தொடர்பான தீர்மானத்தை தேர்தல் ஆணைக்குழுவிற்கு இன்று அறிவித்துள்ளது. Read more »

NPP தேசிய பட்டியல் உறுப்பினர்கள் பெயர்கள் வௌியீடு

தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றம் செல்லும் உறுப்பினர்களின் பெயர் பட்டியலை தேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ளது. இதன்படி, தேசிய மக்கள் சக்தியினால் தேசியப் பட்டியல் ஆசனங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட 18 நபர்களின் பெயர்கள் பிமல் நிரோஷன் ரத்னாயக்க டொக்டர். அனுர கருணாதிலக்க உபாலி... Read more »