மாணவிக்கு மன உளைச்சலை ஏற்படுத்திய ஆசிரியர்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம் தொடர்பில் இன்றைய தினமும் நாடாளுமன்றில் பலரும் கருத்துத் தெரிவித்திருந்தனர். நாடாளுமன்றில் உரையாற்றிய முஜிபுர் ரஹ்மான், மாணவி கல்வி பயின்ற பாடசாலையின் அதிபர், உரிய விசாரணைகளை முன்னெடுக்காமல் சிறுமியை பாடசாலையில் இருந்து விலகிக் கொள்ளுமாறு அழுத்தம் பிரயோகித்துள்ளார் என கூறினார். அத்துடன்... Read more »

வாக்கிற்காக கசிப்பு வழங்கியதா தமிழரசு கட்சி?

இலங்கைத் தமிழரசுக் கட்சி தொடர்பில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, நாடாளுமன்றில் தெரிவித்த கருத்தை மீளப்பெற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வலியுறுத்தினார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி கசிப்பை வழங்கி வெற்றியீட்டியதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க நேற்று நாடாளுமன்றில்... Read more »
Ad Widget

செவ்வந்தி கைது?

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் இஷாரா செவ்வந்தியை போன்று தோற்றமுடைய மற்றுமொரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார். குருணாகல், குளியாப்பிட்டி பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குளியாப்பிட்டி காணி பதிவு அலுவலகத்திற்கு வந்த பெண், செவ்வந்தி என்ற சந்தேகத்தின்... Read more »

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பாக ஆறு அதிகாரிகள் இடைநீக்கம்

பயிற்சி பெறாத பெண்களை வெளிநாட்டு வேலைகளுக்காக அனுப்பியதில் இடம்பெற்றதாக கூறப்படும் 2.5 பில்லியன் மோசடி தொடர்பாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கூடுதல் பொது மேலாளர் உட்பட ஆறு அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 2022 மற்றும் ஓகஸ்ட் 2024 க்கு இடையில், சுமார் 35,000... Read more »

பல்கலைக்கழக மாணவரை தாக்கிய சந்தேகநபர் கைது

ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவரை தலைக்கவசம் கொண்டு தாக்கிய சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர் ஒருவர், அதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் குழுவினால்... Read more »

உலக வங்கியின் தலைவர் நாளை நாட்டிற்கு வருகை

உலக வங்கியின் தலைவர் அஜே பங்கா நாளைய தினம் நாட்டிற்கு வருகைத்தரவுள்ளார். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் அழைப்பிற்கிணங்க உலக வங்கி தலைவர் அஜே பங்கா இலங்கைக்கு வருகைத்தரவுள்ளார். 20 வருடங்களின் பின்னர் உலக வங்கியின் தலைவர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் முதற்... Read more »

மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் 15 பேர் விடுவிப்பு

மியன்மார் சைபர் முகாம்களில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் 15 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். தாய்லாந்து அரசின் தலையீட்டுடன் வெளிவிவகார அமைச்சு மற்றும் தாய்லாந்திலுள்ள இலங்கை தூதரகம் இணைந்து இதற்கான பணியை முன்னெடுத்திருந்தது. விடுவிக்கப்பட்ட 15 மாணவர்கள் மியன்மார் – தாய்லாந்து எல்லையிலுள்ள மியாவாதி பகுதியின்... Read more »

சிலி, அர்ஜென்டினாவில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம் – சுனாமி அச்சம்

தென் அமெரிக்காவில் அமைந்துள்ள சிலி மற்றும் அர்ஜென்டினாவின் கடல் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டரில் 7.4 ஆக பதிவானதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால், சுனாமி அச்சமும் நிலவியது. இந்த நிலநடுக்கம் சீலேவின் தென் கடலோர பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை... Read more »

500 தமிழ் பொலிஸார் சேவையில் இணைக்க நடவடிக்கை

2025ஆம் ஆண்டு இறுதிக்குள் 500 தமிழ் பொலிஸாரை சேவையில் இணைத்துக்கொள்ளும் ஆலோசனைகள் பொலிஸ் திணைக்களத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பொலிஸ் துறையில் 10ஆயிரத்துக்கும் அதிகமான வெற்றிடங்கள் நிலவுகின்றன. இதுகுறித்து பொலிஸ் திணைக்களத்துடன், நடத்தப்பட்ட கலந்துரையாடலின் பிரகாரம் 10ஆயிரம் பொலிஸாரை சேவையில் இணைத்துக்கொள்ள... Read more »

காஸாவுக்கு உதவிப் பொருள்களை ஏற்றிச் சென்ற கப்பல் மீது தாக்குதல்

காஸாவுக்கு மனிதநேய உதவிப் பொருள்களையும் ஆர்வலர்களையும் ஏற்றிச் சென்ற கப்பல் மீது நேற்று வெள்ளிக்கிழமை (மே 2) தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அந்தக் கப்பல் மால்டாவுக்கு அருகே அனைத்துலகக் கடற்பரப்பில் இருந்தபோது ஆளில்லா வானூர்திகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக அனைத்துலக அரசு சாரா அமைப்பான ‘த... Read more »