இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்புகள் மற்றும் நபர்களின் பெயர்களை அறிவித்து புதுப்பிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொந்தாவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 15 அமைப்புகள் மற்றும் 217 நபர்களின் பெயர் விபரங்கள் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளன.... Read more »
விசா காலாவதியாகியதன் காரணமாக பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ளும் இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு காலம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவரிடம் வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் வேண்டுகோள் விடுத்துள்ளார். அமைச்சரின் கோரிக்கையை இஸ்ரேல் அரசாங்கத்திடம் துரிதமாக முன்வைக்க நடவடிக்கை எடுப்பதாக... Read more »
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏழரை மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் நபரொருவர் கைது செய்யப்ட்டுள்ளார். சிகரெட் அட்டைப்பெட்டிகளை எடுத்துச் சென்றபோது விமான நிலைய சுங்க அதிகாரிகளால் அவர் இன்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். கம்பளை பகுதியை சேர்ந்த 25 வயதுடைய தொழிலதிபர் ஒருவரே... Read more »
செலவுகளை பூர்த்தி செய்வதற்காக மின்கட்டணத்தை 18.3 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) ஜூன் முதல் வாரத்தில் இந்த விடயம் தொடர்பான இறுதித் தீர்மானத்தை எடுக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான யோசனையை... Read more »
ஜனாதிபதி அலுவலக, அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த... Read more »
தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து இலங்கைக்கு வந்த பிரிட்டிஷ் பெண் ஒருவரால் சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட குஷ் என்ற போதைப்பொருளின் ஒரு தொகுதியை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் நடத்திய சிறப்பு சோதனையின் போது, நேற்று திங்கள்... Read more »
கொட்டாவ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தீப்பரவியதில் 19 வயது இளம் பெண் ஒருவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொட்டாவ, ருக்மல்கம வீதி, விஹார மாவத்தையை சேர்ந்த புடம்மினி துரஞ்சா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவரது உடல் முற்றிலுமாக எரிந்துவிட்டதாகவும், வீட்டின் சொத்து... Read more »
நாடாளுமன்ற செயலாளர் நாயகத்துக்கான எரிபொருள் கொடுப்பனவு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு வரையறையின்றி எரிபொருள் வழங்கப்பட்டு வந்தது. எனினும் இனிவரும் காலங்களில் மாதமொன்றுக்கு 220 லீட்டர் மட்டுமே எரிபொருள் வழங்கப்படும் என்று புதிய சுற்றுநிருபம் ஒன்றை... Read more »
வெசாக் பண்டிகையை முன்னிட்டு இலவசமாக இணைய வசதி வழங்கும் தானம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் போலி விளம்பரங்கள் குறித்து மிகவும் கவனமாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சிரிக்கை விடுத்துள்ளனர். அதற்கமைய, இலவச இணைய வசதிகள் மற்றும் 50GB Data வழங்குவதாகக்... Read more »
உப்பு இறக்குமதி தாமதமானதன் காரணமாக சந்தையில் உப்பு தட்டுப்பாடு நிலவுவதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 30 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்திருந்த போதும் அது தாமதமாகியுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் கனக அமரசிங்க தெரிவித்தார். இதன் காரணமாக சந்தையில்... Read more »

