மின்சார மோட்டார் சைக்கிளை இறக்குமதி செய்வதற்க்கான புதிய வர்த்தமானி வெளியீடு!

மின்சார மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சைக்கிள்களை உரிமத்தின் கீழ் இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கும் வர்த்தமானி அறிவித்தலை நிதி அமைச்சர் வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதியமைச்சர் என்ற வகையில் நேற்று (23) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த அனுமதியை வழங்கியுள்ளார். இதன்படி, மின்சார... Read more »

யாழில் பேருந்தில் பயணித்த மூதாட்டி உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் இருந்து கொடிகாமம் சந்தைக்கு தேங்காய் கொள்வனவு செய்ய பேருந்தில்சென்ற மூதாட்டி திடீர் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த செபநாயகம் செல்வமலர் (வயது 64) என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த மூதாட்டி நேற்றையதினம் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்த வேளை, திடீரென... Read more »
Ad Widget

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு டேங்கர்களாகவும், நிறுவனங்களுக்கு டொலரில் செலுத்துவதற்கும் எரிபொருள் விநியோகத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை சிரேஷ்ட அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது. இந்த இரண்டு அமைப்புகளுக்கும் ஊக்கமளிக்கும் வகையில் புதிய தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களின் பதிவு... Read more »

வரவு செலவு திட்டம் குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு!

நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம், ஆகஸ்ட் 30 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அன்றைய தினம் பிற்பகல் 1 மணிக்கு நாடாளுமன்றம் கூடும் எனவும், வரவு செலவுத் திட்ட உரை பிற்பகல் 2 மணி வரை... Read more »

யாழில் மது போதையில் பேருந்து செலுத்திய சாரதி கைது!

மதுபோதையில் பயணிகள் பேருந்தை செலுத்தி சென்ற இலங்கை போக்குவரத்து சபையின் சாரதி மானிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து நேற்று(23) இரவு 7 மணியளவில் காரைநகர் நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தினை செலுத்திய சாரதி மது... Read more »

கடற்றொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க ஏற்பாடு!

கடற்றொழிலாளர்களின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பிற்கு விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மண்ணெண்ணையின் விலை அதிகரிப்பை கடற்றொழிலாளர்கள் சமாளிக்கும் வகையில் நிவாரணம் வழங்குவதற்கும் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் ஒருங்கிணைப்பாளரின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில்... Read more »

நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி

கோட்டாபய ராஜபக்ச நாளைய தினம் 24 ஆம் திகதியன்று இலங்கைக்கு திரும்பவிருந்தபோதும், அது மேலும் இரண்டு வாரங்களுக்கு தாமதமாகும் என்று ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. அத்துடன் கோட்டாபயவுக்கு தாய்லாந்தில் தங்கியிருப்பதில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியினால் அவர் நாடு திரும்புவதை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இலங்கையின் முன்னாள்... Read more »

நாட்டில் அதிகரிக்கும் கொரொனோ தொற்று குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது!

நாட்டில் தற்போதைய கோவிட் நிலைமை புறக்கணிக்கப்பட்டு வருவதால் மற்றுமொரு கோவிட் அலை வேகமாக பரவி வருவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. பொதுசுகாதார பரிசோதகர்கள் ஒன்றியத்தின் தலைவர் உபுல் ரோஹன இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் கோவிட்... Read more »

விசாரணைக்காக இலங்கை வரும் ஸ்கொட்லன்ட்யார்ட் பொலிஸார்

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடாத்துவதற்காக ஸ்கொட்லன்ட்யார்ட் பொலிஸார் இலங்கை வருகை தரவுள்ளனர். ஜனாதிபதி செயலகத்தின் பேச்சாளர் ஒருவர் இந்த தகவலை தெற்கு ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் திகதி உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்... Read more »

ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்த சஜித்

அரசாங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்த அழைப்பை எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசவும் நிராகரித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் அதிகாரிகள் குழுவிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள்... Read more »