நாட்டில் கோவிட் பெருந்தொற்று பரவுகை குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாளாந்தம் 100 கோவிட் தொற்று உறுதியாளர்கள் பதிவாகுவதுடன், 3 முதல் 6 மரணங்கள் பதிவாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனவே அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட சுகாதார பழக்கவழக்கங்களை பின்பற்ற வேண்டுமென தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் பிரதானி வைத்தியர் சமித கினிகே தெரிவித்துள்ளார்.
நோய்த் தொற்று பரவுகை
பத்திரிகையொன்றுக்கு அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
நிலவி வரும் குளிரான காலநிலை காரணமாக நோய்த் தொற்று பரவுகை வேகமாகும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தடுப்பூசி பெறுமாறு அறிவுறுத்தல்
உலக அளவில் கோவிட் தொற்று அதிகரிப்பு பதிவாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கோவிட் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவர்கள் உடனடியாக பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
சிலர் கோவிட் தொற்றை மறந்து செயற்பட்டு வருவதாக வைத்தியர் கினிகே சுட்டிக்காட்டியுள்ளார்.