வடக்கு கிழக்கு மக்களுக்கு விசேட லொத்தர் ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ள இலங்கை தேசிய லொத்தர் சபை!

நாட்டு மக்களுக்கான அறிவிப்பு லொத்தர் சீட்டுகளைக் கொள்வனவு செய்வதன் மூலம் மக்கள் அனைவரும் நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிக்க முடியும் என தேசிய லொத்தர் சபையின் பதில் தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் சி.பெரேரா தெரிவித்துள்ளார். தேசிய லொத்தர் சபையினால் இந்த ஆண்டு பரிசுகளை வெற்றி... Read more »

அரசாங்க ஊழியர்கள் குறித்து புதிய நடவடிக்கை மேற்கொள்ள இருக்கும் அரசு!

அரச சேவையில் உள்ள அதிகப்படியான அரச ஊழியர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன அறிவித்துள்ளார். தகவல் திணைக்களத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அரச துறைக்கான... Read more »
Ad Widget

சில வைத்தியசாலைகளில் சுகாதார உதவி பணியாளர்களுக்கு உணவு வழங்குவதில் பாரிய சிக்கல் ஏற்ப்பட்டுள்ளது!

மருந்து தட்டுப்பாட்டுக்கு மேலதிகமாக சில வைத்தியசாலைகளில் நோயாளர்கள் மற்றும் சுகாதார உதவி பணியாளர்களுக்கு ஒரு வேளை உணவை வழங்குவது பெரிய சிக்கலாக மாறியுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது. உணவுப் பொருட்கள் உணவுப் பொருட்களை விநியோகிப்போருக்கு சரியான முறையில் பணத்தை வழங்கவில்லை என்பதால்... Read more »

இலங்கைக்கு பெருமை சேர்த்த வீர வீராங்கனைக்கு பண பரிசில்கள்

ஶ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் இலங்கை வலைபந்தாட்ட அணி வீராங்கனைகளுக்கு தலா இரண்டு மில்லியன் ரூபா பணப்பரிசு வழங்கியுள்ளது. ஆசிய கிண்ணங்களை வென்ற இலங்கை கிரிக்கட் மற்றும் வலைபந்தாட்ட அணி வீர, வீராங்கனைகளை கௌரவிக்கும் நிகழ்வு இன்றைய தினம் நடைபெற்றது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில்... Read more »

இலங்கைக்கு அதிக கடன் வழங்கிய நாடுகளில் முன்னிலை வகிக்கும் இந்தியா

இலங்கைக்கு இந்த ஆண்டு அதிக கடன் வழங்கியதில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவிற்கு அடுத்தபடியாக ஆசிய அபிவிருத்தி வங்கி காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கொழும்பு நகரை மையமாக கொண்டு இயங்கி வரும் ‘வெரிட் ரிசர்ச்’ என்ற ஆய்வு அமைப்பு முன்னெடுத்த ஆய்வில் இந்த... Read more »

மட்டக்களப்பு வாகரை பகுதியில் பெருமளவிலான வெடி பொருட்கள் மீட்பு!

மட்டக்களப்பு – வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள கதிரவெளி பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் முகாமான ஜீவன் முகாம் அமைந்திருந்த பகுதியில் நிலத்துக்குள் இருந்து பெருந்தொகையான வெடிபொருட்களை இன்று விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர் என்று வாகரை பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை நீதிமன்ற மேலதிக நீதிவான் ரி.கருணாகரன் முன்னிலையில்... Read more »

நாட்டில் நாளாந்த உணவு தேவைக்கான செலவு அதிகரிப்பு!

இலங்கையில் நான்கு பேர் கொண்ட குடும்பம் ஒன்றுக்கு நாளாந்த உணவு தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்காக குறைந்தது 2500 ரூபா செலவாகுவதாக ஆய்வொன்று தெரிவித்துள்ளது. வைத்திய மற்றும் சிவில் உரிமைகள் தொழிற்சங்க ஒன்றியம் மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. உணவு தேவைக்கான நாளாந்த... Read more »

வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்க்காக காத்துக்கிடக்கும் இலங்கையர்கள்

வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்காக கொழும்பில் அலையென மக்கள் திரண்டு நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கட்டார் விமான சேவை நிறுவனத்தின் வெற்றிடத்திற்காக நேர்முகத்தேர்வு இன்றைய தினம் நடைபெற்றது. இந்த நேர்முகத் தேர்வில் பங்கேற்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பொருளாதார நெருக்கடி கொழும்பில் நடைபெற்ற... Read more »

வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள இலங்கையின் பாதாள உலகக்குழுவினரை சேர்ந்த 13 பேரை நாடு கடத்த திட்டம்!

வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள தேடப்படும் பாதாள உலகக்குழுவினர் 13 பேரை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கையின் பொது பாதுகாப்பு அமைச்சு இன்று தெரிவித்துள்ளது. தேடப்படும் குற்றவாளிகள் அனைவரும் துபாயில் தலைமறைவாகி உள்ளதாகவும், அவர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வந்து விசாரணைக்கு உட்படுத்த தேவையான... Read more »

திருமண நிகழ்வில் நடந்த மோதலால் பலர் வைத்தியசாலையில் அனுமதி!

பாணந்துறை சுற்றுலா ஹோட்டலில் இன்று (16) நடைபெற்ற திருமண நிகழ்வின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். மணமகன் தரப்பில் இருந்து வந்த கண்டி மற்றும் கடுகண்ணாவ பிரதேசவாசிகள் குழுவொன்றே இவ்வாறு கைது... Read more »