நாட்டில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது!

அஹுங்கல்ல- போகஹபிட்டிய பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். போகஹபிட்டிய, ஊரகஹா வீதியில் நேற்றிரவு முச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த இருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரும் பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதன்போது அஹுங்கல்ல... Read more »

கடத்தல்காரர்கள் குறித்து இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

மலேசியாவில் வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதாக கூறி சதி நடவடிக்கையில் ஈடுபடும் கடத்தல்காரர்களிடம் சிக்கிக் கொள்ள வேண்டாம் என இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக தொழில் தேடி வெளிநாட்டிற்குச் செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து... Read more »
Ad Widget

அரச ஊழியர்களின் சம்பளம் குறித்து வெளியாகியுள்ள தகவல்!

வரவு, செலவு திட்டத்தில் வரவுக்கும் செலவுக்கும் இடையிலான இடைவெளியை சமநிலைப்படுத்தாவிட்டால், சர்வதேச நாடுகளிடமிருந்து கடனுதவியைப் பெற்றுக் கொள்ள முடியாது என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். எனவே அரச நிதி முகாமைத்துவம் ஒழுக்கமுடையதாக இடம்பெற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் இதற்காக... Read more »

காலி முகத்திடல் கடற்பரப்பில் நிகழ்ந்த அதிசயம்

கொழும்பு காலி முகத்திடல் பகுதியில் உள்ள கடல் பகுதியில் திடீரென ஒளி ஒன்று தோன்றியுள்ளதென தெரியவந்துள்ளது. சமூக ஊடகங்களில் இலங்கையர் ஒருவர் பகிர்ந்துள்ள காணொளியின் ஊடாக இந்த தகவல் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. ஒளியின் உற்பத்தி பயோலுமினென்சென்ஸ் எனப்படும் ஒரு உயிரினத்தால் ஒளியின் உற்பத்தி... Read more »

இன்றைய வானிலை குறித்து பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இன்றைய வானிலை குறித்த அறிவித்தல் வெளியாகியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதேவேளை ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் சில இடங்களில் மாலை அல்லது... Read more »

ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு!

தலைநகர் கொழும்பில் முக்கியமான பகுதிகளை உயர் பாதுகாப்பு வலயமாக மாற்றும் வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று வெளியிட்டுள்ளார். இந்த உத்தரவுகளை அமுல்படுத்துவதற்கான தகுதியான அதிகாரியாக பாதுகாப்புச் செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு வலயம் மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின்... Read more »

பிரதமரின் அழைப்பை நிராகரித்த நாடாளுமன்ற உறுப்பினர்

நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கி தேசிய பேரவை அமைப்பதற்கு பங்கடுக்குமாறு பிரதமரால் விடுக்கப்பட்ட அழைப்பை தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் (C.V.Vigneshwaran) நிராகரித்துள்ளார். மேலும் இன்றைய தினம் (23-09-2022)வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற கட்டடத்தில் அமைந்துள்ள பிரதமரின் அலுவலகத்தில் இடம்... Read more »

நாட்டில் ஏற்ப்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் குழந்தைகளை பராமரிக்க இயலாமல் சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் ஒப்படைக்கும் பெற்றோர்!

நாட்டில் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக பிள்ளைகளைப் பராமரிக்க முடியாதெனத் தெரிவித்து சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில், பெற்றோரால் ஒப்படைக்கப்படும் பிள்ளைகளின் எண்ணிக்கை வடக்கு மாகாணத்தில் இந்த ஆண்டு சடுதியாக அதிகரித்துள்ளது. அதிலும் யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே அதிகளவான பிள்ளைகள் அப்படி ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை... Read more »

இலங்கைக்கு மகிழ்வான செய்தியை வெளியிட்டுள்ள சர்வதேச நாணயநிதியம்

சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக கடனுக்கான அனுமதியை இலங்கை பெற்றுக்கொள்வது தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கமைய, இந்த வருட இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுக்கான அனுமதியை இலங்கை பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை மத்திய வங்கி... Read more »

ருமேனியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பிச்செல்ல முயன்ற இலங்கையர்கள் கைது!

ருமேனியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் நோக்குடன் ஹங்கேரி எல்லையூடாக தப்பிச்சென்ற 37 இலங்கையர்கள் உட்பட்ட 70க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொருட்களை ஏற்றச்சென்ற மூன்று லொறிகளில் மறைந்து பயணித்தபோதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முதலாவது சம்பவத்தில், இத்தாலிக்கு குளிர்சாதனப் பெட்டிகளை ஏற்றிச் சென்ற... Read more »