தலைமன்னாரில் கடலாமை இறைச்சி விற்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது.

கடல் ஆமையினை இறைச்சியாக்கி விற்பனை செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்துள்ளதாகத் தலைமன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்றைய தினம் (28.01) செவ்வாய்கிழமை, தலைமன்னார் ஸ்டேஷன் குடியிருப்பு பகுதியில் வைத்து கடல் ஆமையினை இறைச்சியாக்கி ஒருவர் விற்பனை செய்வதாகக் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய,... Read more »

மன்னாரில் வீடொன்று முற்றாகத் தீக்கிரை.

மன்னார் சாந்திபுரம் பகுதியில் இன்று (27.01) திங்கள்,காலை குடிசை வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக  வீடு  முற்றாக எரிந்து தீக்கிரையாகியுள்ளது. கிராம மக்களினால் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மன்னார் சாந்திபுரம் சிறுவர் பூங்காவிற்குப் பின் பகுதியில் உள்ள வீடொன்றே தீப்பற்றி... Read more »
Ad Widget

யாழ். வடமராட்சி முக்கிய நிதி நிறுவனமொன்றில் அடகு வைக்கப்பட்ட 22 லட்சம் மதிப்புள்ள தங்கம்   ஊழியர்களால் கொள்ளை!

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் உள்ள இலங்கையின் பிரபல நிதி நிறுவனம் ஒன்றின் கிளையிலிருந்து அடகு வைக்கப்பட்ட பல நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில் நான்கு பேர் நேற்று (21) மரதன்கேணி பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட நால்வரில் இருவர் பெண்கள், மற்ற இருவர் ஆண்கள்,... Read more »

அரசாங்கத்தின் திட்டத்தை பின்பற்றப்படாவிட்டால், அரிசி ஆலை இராணுவத்தால் கையகப்படுத்தப்படும்-  ஜனாதிபதி!

அரசாங்கத்தின் திட்டத்தின்படி இயங்காத அரிசி ஆலைகளுக்கு இராணுவம் அனுப்பப்படும் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார். நேற்று (21) இரவு சிரச தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சட்டன சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். பெரிய அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் அரசாங்கத்தின்... Read more »

மன்னாரில் மீண்டும் வெள்ள அபாயம், அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர் எச்சரிக்கை!

மன்னார் மாவட்டத்தில் அருவியாற்றினை  அண்டிய கிராமங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்கு தயாராக இருக்குமாறு, மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்னிலங்கைப் பகுதியில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக  முக்கியமான பெரிய குளங்களின் வான் கதவுகள்... Read more »

யாழ்ப்பாணத்தைத் தாக்கிய சூறாவளி.. நூற்றுக்கணக்கானோர் பாதிப்பு..

யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் பெய்த கனமழையுடன் கூடிய சூறாவளி காரணமாக மூன்று பேர் காயமடைந்துள்ளதாகவும், 222 பேர் வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தின் குருநகர் மற்றும் கொழும்புதுறை பகுதிகளைத் தாக்கிய சூறாவளி போன்ற சூழ்நிலையில் 49 வீடுகள் சேதமடைந்தன, மூன்று... Read more »

மன்னாரில் புகையிரதப் பாதையருகே இளம்பெண்ணின் சடலம்!

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோட்டக்காடு புகையிரத கடவையின் அருகில் இளம் பெண் ஒருவரின் சடலம் இன்று(20.01)திங்கள் காலை அடையாளம் காணப்பட்டுள்ளது. இன்று (20) அதிகாலை 4.30 மணியளவில் தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் குறித்த பெண் மோதி உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம்-இராணுவ சிப்பாய் உள்ளடங்களாக மூவர் கைது-பொலிஸார் தெரிவிப்பு.

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் கடந்த  வியாழன் (16) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவத்தில் பணியாற்றும்  சிப்பாய் ஒருவர் உள்ளடங்களாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இராணுவத்தில் பணியாற்றும்  சிப்பாய்   மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி நடுக்குடா கடற்கரை பகுதியில்... Read more »

விஜயமுனி சொய்சா கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா, வாலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஒன்று சேர்க்கப்பட்ட லொரி தொடர்பாக அவர் ஊழல் தடுப்புப் பிரிவுக்கு வாக்குமூலம் அளிக்க வந்தபோது கைது செய்யப்பட்டார். கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் வாக்குமூலம் அளித்த... Read more »

கல்கிசையில் ஒருவரை சுட்டுக் கொன்று தப்பிச் சென்ற கொலையாளியை மடக்கிப் பிடித்த பொலிஸார்!

கல்கிஸ்ஸை, சிறிபுர பகுதியில் இன்று (19) பிற்பகல் ஒருவரை சுட்டுக் கொன்ற கொலையாளி தப்பிச் செல்லும் போது தெஹிவளையின் கௌடான பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். கொலையாளி மற்றுமொரு நபருடன்   மோட்டார் சைக்கிளில் வந்து, கொலையைச் செய்துவிட்டு தப்பிச் சென்ற வேளையில்  பொலிஸார்  துப்பாக்கியுடன்... Read more »