இனவாதிகளுக்கு சுதந்திரம் வழங்கிய ஜனாதிபதி

அரகலவை கட்டுப்படுத்திய ஜனாதிபதி இனவாதிகளுக்கு ஏன் சுதந்திரம் வழங்கியுள்ளார் ரெலோ இளைஞர் அணித் தலைவர் சபா குகதாஸ் இலங்கை வரலாற்றில் தென்னிலங்கையில் மக்களின் அறவழிப் போராட்டத்தால் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய துரத்தப்பட்ட பின்னர் அரகல தரப்பு ஏனையோரையும் விரட்ட தீவிரம் பெற்ற போது பதில்... Read more »

‘சிறுபொறி’ பத்திரிகை மீண்டும் வெளியீடு

47 ஆண்டுகளின் பின் கையெழுத்துப் பத்திரிகையாக இருந்த ‘சிறுபொறி’ மீண்டும் பாடசாலை மாணவருக்கான சஞ்சிகையாக வெளி வர இருக்கிறது. கே.ஏ.எஸ் சத்தியமனை நூலகம் KAS Sathiamanai Library – ஐ அண்மித்த வலி மேற்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 19 பாடசாலைகள் பங்குபெற்ற ஓவியப்போட்டியில்... Read more »
Ad Widget

யோகக்கலை கற்கைநெறியின் புதிய பிரிவு ஆரம்பம்

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இளைஞர் விவகார அலகினால் உடல், உள மேம்பாட்டிற்காக இலவசமாக நடத்தப்பட்டுவருகின்ற யோகக்கலை அடிப்படை  கற்கைநெறியின் புதிய பிரிவு நல்லூர்க் கந்தன் ஆலய பின்வீதியில் அமைந்துள்ள நல்லூர் மங்கையற்கரசி வித்தியாலயத்தில் 23.09.2023 சனிக்கிழமை காலை 6.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெறவுள்ளது.... Read more »

ஊர்காவற்றுறை வைத்தியசாலைக்கு வன்னி ஹோப்பினால் மருந்துகள் கையளிப்பு

ஊர்காவற்றுறை வைத்தியசாலைக்கு வன்னி ஹோப்பினால் மருந்துகள் கையளிப்பு இன்றையதினம் (24.8.2023) வைத்தியர் வாணி பிறேம்ஜித் ( USA ) என்பவரின் நிதிப்பங்களிப்பு உதவியுடன், தொண்டு நிறுவனமாகிய வன்னி ஹோப் நிறுவனத்தினால் யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலைக்கு அத்தியாவசிய மருந்துகள் வழங்கி வைக்கப்பட்டன. குறித்த... Read more »

புதுப் பொலிவு பெறும் தியாக தீபம் நினைவாலயம்

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் வாரம் ஆரம்பமாகவுள்ளது. அதற்கான ஏற்பாடுகளில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் மிகவும் தீவிரமாக உள்ளனர். இந்நிலையில் தியாக தீபத்தின் நினைவுத் தூபி அமைந்துள்ள பகுதியானது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் புனரமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. Read more »

மேர்வின், வீரசேகர, கம்மன்பில மூவரும் இணைந்து இனக் கலவரத்துக்கு திட்டம்? – சுகாஷ் சந்தேகம்

ஆட்டை கடித்து, மாட்டை கடித்து, தமிழ் மக்களை கடித்து, தமிழ் மக்களுடைய அரசியல் பிரதிநிதிகளை கடித்து இறுதியாக நீதிபதிகளையும் கடித்து குதறத் தொடங்கியுள்ளது சிங்கள பௌத்த பேரினவாதம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணத்தில்... Read more »

சிவபூமி முதியோர்களுக்கு படை பிரிவினரால் உணவளிப்பு

சிவபூமி முதியோர் இல்லத்திலுள்ள முதியோர்களுக்கு இன்று 513 படைப்பிரிவின் படைத்தளபதி பிரிட்ஜெடியர் ராசிக் கட்டளைக்கு அமைவாக மதிய உணவு வழங்கி வைக்கப்பட்டுள்ளது. படைப் பிரிவினர் முதியோர்களை வரவேற்று அவர்களுக்கான உணவுகளை பரிமாறியதும் குறிப்பிடத்தக்கது. Read more »

வடக்கு மக்களின் வாழ்க்கை குறித்து அமெரிக்கத் தூதுவர் மகிழ்ச்சி

தற்போது வடமாகாணத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகள் மற்றும் மக்களின் அன்றாட வாழ்க்கைச் செயற்பாடுகள் தொடர்பில் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், வடக்கின் அபிவிருத்திக்கு அதிகபட்ச ஆதரவை வழங்குவதாகவும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் திருமதி ஜூலி ஜே. சுங் தெரிவித்துள்ளார். வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களை இன்று (23.08.2023) ஆளுநர்... Read more »

யாழில் பச்சிளம் பாலகன் மரணம்!

ஐந்து நாட்கள் தொடர் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த, பிறந்து எட்டு நாட்களேயான குழந்தை ஒன்று இன்றையதினம் (22-08-2023) உயிரிழந்தது. குறித்த குழந்தை பிறந்து மூன்று நாட்களில் காய்ச்சலால் பிடிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 19ஆம் திகதி காலை நயினாதீவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, மேலதிக அங்கிருந்து பிற்பகல்... Read more »

கடற்கொள்ளையர்கள் தாக்குதல்: தமிழக மீனவர்களுக்கு நடந்தது இனி யாருக்கும் நடக்கக் கூடாது – அன்னராசா

செவ்வாய்க்கிழமை இரவு இலங்கை கடற்பகுதியிலே தமிழ்நாடு – காரைக்காலை சேர்ந்த மீனவர்கள் தாக்கப்பட்டதாக இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன. இலங்கை கடல் கொள்ளையர்களால் இந்திய மீனவர்கள் தாக்கப்பட்டதாக செய்தி பரவிக் கொண்டிருக்கின்றது. இலங்கை கடற்பரப்பிலேயே சகோதர மீனவர்கள் தாக்கப்பட்டமை கவலை அளிக்கின்ற ஒரு... Read more »