பொது இடத்தில் வைத்து மனைவிக்கு முத்தமிட்ட கணவருக்கு நேர்ந்த கதி!

தனது மனைவிக்கு பொது இடத்தில் வைத்து முத்தமிட்ட கணவரை கும்பலொன்று சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் உத்தரகாண்ட் மாநிலம், சரயு நதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது, சரயு நதியில் மனைவியுடன் குளித்துக் கொண்டிருந்த குறித்த நபர், தனது... Read more »

ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 10 பேர் சந்தேகத்தின் பேரில் கைது!

ஹெரோயின் போதைப்பொருளை கடத்தி வந்ததாக கூறப்படும் இரண்டு கடற்தொழில் படகுகளை இலங்கை கடற்படையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர் இதன்போது சந்தேகத்தின் பேரில் 10 பேர் நேற்று (16.01.2023) கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த படகுகள் கடலில் தடுத்து வைக்கப்பட்டு கொழும்புக்கு கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள்... Read more »
Ad Widget

நாட்டின் அந்நிய செலவாணி கையிருப்பு உயர்வு!

நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. கடந்த 2022 டிசம்பர் மாத இறுதியில் நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு 1896 மில்லியன் டொலர்களாக உயர்வடைந்துள்ளது. கடந்த 2022 நவம்பர் மாத இறுதியில் 1806 மில்லியன் டொலர்களாக காணப்பட்டது. டிசம்பரில் டொலர் கையிருப்பு உயர்வு... Read more »

யாழில் வாகன விபத்தில் சிக்குண்ட 27 வயது இளைஞன் உயிரிழப்பு!

யாழ். காங்கேசன்துறை மாவிட்டபுரம் பகுதியில் வாகன விபத்தில் இளைஞரொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று (16.01.2023) பதிவாகியுள்ளது. யாழ். மாவைகலட்டி பகுதியைச் சேர்ந்த 27 வயதான தா.தினேஷ் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார். வாகன சாரதி கைது இந்நிலையில் பட்டா வாகனமும்... Read more »

கழுத்தில் ஆழமான வெட்டுக் காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

கொழும்பு – 7 பகுதியிலிருந்து இன்று பிற்பகல் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குதிரை பந்தய திடலிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய பெண்ணொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கழுத்தில் ஆழமான காயங்கள் பாதிக்கப்பட்ட பெண்ணின் கழுத்தில் ஆழமான வெட்டுக்... Read more »

நாட்டிலுள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டும் வாய்ப்பு!

நாட்டில் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்றைய தினம் (16-01-2023) இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையத்தின் அதிகாரிகளுடன் எரிபொருள் ஒழுங்குபடுத்தல் மற்றும் விநியோகம் தொடர்பான முன்னேற்ற மீளாய்வு கூட்டம் நடைபெற்றது. QR அமைப்புக்கு... Read more »

பிரபல பாடசாலை ஊழியர் ஒருவர் சடலமாக மீட்பு!

பாடசாலையின் ஊழியர் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இவர் கண்டி புனித சில்வெஸ்டர் கல்லூரியின் விளையாட்டு மைதானத்துக்கு பொறுப்பான பாதுகாப்பு ஊழியர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பண்டாரகம பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.... Read more »

இலங்கையர்களுக்கு இலவச அரிசி

சமுர்த்தி பயனாளர்கள் உட்பட குறைந்த வருமானம் பெறும் 2 மில்லியன் குடும்பங்களுக்கு மாதாந்தம் 10 கிலோகிராம் அரிசியை 2 மாத காலத்திற்கு வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதற்காக 40,000 மெட்ரிக் தொன் அரிசி தேவைப்படுவதோடு,... Read more »

ஆசிரியர்களின் இடமாற்றம் குறித்து வெளியாகியுள்ள புதிய செய்தி!

இனி வரவுள்ள காலங்களில் ஆசிரியர்களின் இடமாற்றம் ஒன்லைன் முறையின் மூலம் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கல்வி அமைச்சு இன்று அறிவித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. NEMIS-THRM எனப்படும் மனித வள மேலாண்மை அமைப்பில் சேமிக்கப்பட்ட தனிப்பட்ட மற்றும் சேவைத் தரவுகளுடன் இடமாற்றங்கள் செய்யப்படும் என்று... Read more »

உயர்தர பரீட்சை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

உயர்தரப் பரீட்சையை இலக்காகக் கொண்டு மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதற்கு இன்று (17) நள்ளிரவு முதல் தடைசெய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தேச கேள்விகள் அடங்கிய வினாத்தாள்களை அச்சிடுவது மற்றும் விநியோகிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். உயர்தரப் பரீட்சை... Read more »