யாழில் போதைப்பொருள் பாவனை மற்றும் பரவலை கட்டுப்படுத்துவதற்கு மாவட்ட மட்டத்திலான குழு ஒன்றினை அமைத்து இணைந்த நடவடிக்கையினை மேற்கொள்ளவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மாவட்ட செயலகத்தில் நேற்று முன்தினம் (12-09-2023) நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அரசாங்க அதிகாரிகள், வைத்திய... Read more »
யாழில் அனுமதியின்றி மத்திய அரசாங்கத்தால் அண்மைக் காலத்தில் 4 மதுபானசாலைகள் திறக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் ஆ.சிவபாதசுந்தரன் தெரிவித்தார். யாழில் இடம்பெறும் குற்றங்கள் தொடர்பான அதிகாரிகள் மட்ட விசேட கலந்துரையாடல் நேற்று யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும்... Read more »
பிரபல பாதாள உலக நபரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘கனேமுல்ல சஞ்சீவ’ என்ற சஞ்சீவ குமார கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பிரபல குற்றவாளி நேபாளத்தில் இருந்து திரும்பி வந்தபோதே கைது செய்யப்பட்டதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.... Read more »
வடமாகாணத்தில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் ஸ்மாட் போன் பாவனைக்கு தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது. இதன்படி, முதற்கட்டமாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் ஸ்மாட் போண் பாவனைக்கான தடை நடைமுறைக்கு வந்துள்ளது. யாழப்பாண போதனா வைத்தியசாலையில் கடமை நேரத்தில் தாதியர்கள், சுகாதார உதவியாளர்கள், பாதுகாப்பு... Read more »
இலங்கையில் மொத்த சனத்தொகையில் 5 சதவீதமானோருக்கு பிறப்புச்சான்றிதழ் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இவர்களுக்கான பிறப்புச்சான்றிதழை பெற்றுக்கொள்வதற்காக எதிர்வரும் காலங்களில் விசேட வேலைத்திட்டமொன்றை நடைபடுத்தவுள்ளதாகவும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. கடந்த காலங்களில் பிறப்புச் சான்றிதழ் இல்லாத 14... Read more »
தமிழீழ விடுதலைப் புலிகளால் விளையாட்டுத்துறைக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை என முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்தாவது, தமிழீழ விடுதலைப் புலிகள்... Read more »
சீனாவின் சினோபெக் நிறுவனம், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான பத்தரமுல்லையில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில், இன்று(13) எரிபொருள் விநியோகத்தை ஆரம்பித்துள்ளது. சினோபெக் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அனைத்து வகையான எரிபொருட்களையும் 3 ரூபாய் விலை குறைப்பின் கீழ் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more »
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஸ்மார்ட் போன்களை பாவிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். ஸ்மார்ட் போன்களை பாவிக்க தடை கடமை நேரத்தில் தாதியர்கள், சுகாதார ஊழியர்கள், பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் நோயாளர் பராமரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் கையடக்க தொலைபேசியை பாவிக்க... Read more »
இன்று புதன்கிழமை (செம்டெம்பர் 13) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 316.7737 ஆக பதிவாகியுள்ளது. அதேசயம் டொலரின் விற்பனை விலை ரூபா 328.5308 ஆகவும் பதிவாகியுள்ளது. Read more »
சட்டத்துக்கு முரணான வகையில் இலங்கையிலிருந்து சீனாவுக்கு குரங்குகளை ஏற்றுமதி செய்வது தொடர்பில் , அரசாங்கத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விசாரணையை முடித்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. சுமார் ஒரு இலட்சம் குரங்குகளை சீன நிறுவனம் ஒன்றுக்கு அனுப்பி வைக்கவுள்ளதாகவும் இந்த நடவடிக்கையை... Read more »

