முதன் முறையாக இலங்கையில் ஒரே பிரசவத்தில் பிறந்த ஆறு ஆண் குழந்தைகள்

கொழும்பு – காசல் ஸ்ட்ரீட் மகளிர் வைத்தியசாலையில் பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் ஆறு ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். ராகமைப் பகுதியைச் சேரந்த பெண் ஒருவரே இவ்வாறு ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். இலங்கையில் ஒரே பிரசவத்தில் ஆறு ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது... Read more »

தமிழர் பகுதியில் பெருமெடுப்பில் வந்திறங்கிய புத்தர்

மட்டக்களப்பு – மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (15) அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தலைமையில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் அனுராத யஹம்பத்தின் பங்களிப்புடன் புதிய புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது மாதவனை மயிலத்தமடு பிரதேசம் பாரம்பரியமாக தமிழ் பால் பண்ணையாளர்களால்... Read more »
Ad Widget

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படும் பணம்

குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை எதிர்வரும் ஜனவரி(2024) மாதத்தின் பின்னர் தாமதமின்றி வங்கிக் கணக்குகளில் வைப்பிலிட நடவடிக்கை எடுக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபையின் மேலதிக ஆணையாளர் ரத்னசிறி ராஜபக்ச தெரிவித்துள்ளார். அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை பெறுவதற்கு தகுதி பெற்ற... Read more »

மீண்டும் விளையாடவரும் தனுஷ்க குணதிலக

பாலியல் வழக்கில் சிக்கிய இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. சுயாதீன விசாரணை தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆராய்வதற்காக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நியமித்த ‘சுயாதீன விசாரணைக்... Read more »

நாட்டில் தொழுநோயால் பாதிக்கும் சிறுவர்கள்

நாட்டில் தொழுநோயாளர்களில் 10 வீதமானோர் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சுகாதார அமைச்சின் தொழுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. சிறந்த முறையில் தொழுநோயைக் கட்டுப்படுத்தும் நாடொன்றில் சிறுவர் தொழுநோயாளர்களின் எண்ணிக்கை 4 வீதத்திற்கும் குறைவாகக் காணப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை... Read more »

யாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவு தூபி தொடர்பில் முறைப்பாடு பதிவு

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தூபி உரிய அனுமதிகள் பெறப்படாமல் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முறைப்பாடுகளை பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் யாழ்ப்பாணம் கட்டுடை மற்றும் கிளிநொச்சி விசுவமடு ஆகிய பிரதேசங்களை சேர்ந்த இரு... Read more »

இஸ்ரேலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை பெண்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

இஸ்ரேல் மற்றும் ஜோர்தான் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு இலங்கைப் பெண்களும் மீண்டும் ஜோர்தானுக்கு அனுப்பப்படவுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். ஜோர்தானில் இருந்து சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் பிரவேசித்த போது கடந்த 14.10.2023 அன்று இரு இலங்கைப் பெண்கள்... Read more »

காஸா பகுதியில் வசிக்கும் இலங்கையர்கள் தொடர்பில் வெளியான தகவல்

பாலஸ்தீனத்தில் உள்ள இலங்கை தூதரக அலுவலகம் செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து காஸா பகுதியில் வசிக்கும் இலங்கையர்களை வெளியேற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளது. இந்தநிலையில் காஸா பகுதியில் மூன்று குடும்பங்கள் உட்பட 17 இலங்கையர்கள் வசித்து வருவதாக அந்த அலுவலகத்தின் தலைவர் பென்னட் குரே தெரிவித்துள்ளார். இதில்... Read more »

மனித உரிமை ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பு

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) நாட்டிலுள்ள மனித உரிமை பாதுகாவலர்களை பாதுகாப்பதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் பரிந்துரைகளின் தொகுப்பை வெளியிடத் திட்டமிட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்கள் மற்றும் பரிந்துரைகளை இறுதி செய்வதற்கு, தற்போது ஆலோசனைகளில் ஈடுபட்டு வருவதாக ஆணைக்குழு அறிவித்துள்ளது. அக்டோபர் 10 ஆம் திகதி... Read more »

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இதன்படி உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 86.68 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய்... Read more »