மட்டக்களப்பு – மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (15) அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தலைமையில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் அனுராத யஹம்பத்தின் பங்களிப்புடன் புதிய புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது
மாதவனை மயிலத்தமடு பிரதேசம் பாரம்பரியமாக தமிழ் பால் பண்ணையாளர்களால் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், அப்பகுதியை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள சிங்கள குடியேற்றவாசிகளுக்கு ஆதரவாக புதிய புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ் விவசாயிகள் குற்றம் சுமத்துகின்றனர்
தமிழர் பகுதிகளில் தொடரும் ஆக்கிரமிப்பு
தமிழர் பகுதிகளில் தொடர்ந்து காணி அபகரிப்பிலும், குடிசார் பரம்பலை மாற்றியக்கவும், பௌத்த மயமாக்கலை தொடர்ச்சியாகவுமே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அதேவேளை மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரையை விடுவிடுவிக்குமாறு பண்ணையாளர்கள் போராட்டங்களை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.