இஸ்ரேல் மற்றும் ஜோர்தான் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு இலங்கைப் பெண்களும் மீண்டும் ஜோர்தானுக்கு அனுப்பப்படவுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
ஜோர்தானில் இருந்து சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் பிரவேசித்த போது கடந்த 14.10.2023 அன்று இரு இலங்கைப் பெண்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்த இரண்டு பெண்களின் அடையாளம் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத உள்நுழைவு
இதேவேளை இரண்டு இலங்கை பெண்களும் ஜோர்தான் எல்லை வழியாக சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் பிரவேசித்துள்ளனர், எனவே அவர்கள் மீண்டும் ஜோர்தானுக்கு அனுப்பப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இருவரின் பாதுகாப்பு மற்றும் எதிர்கால விவகாரங்கள் தொடர்பாக ஜோர்தானில் உள்ள இலங்கை தூதரகத்துடன் நான் ஒருங்கிணைந்து செயற்படுவேன் எனவும் தூதுவர் நிமல் பண்டார உறுதியளித்துள்ளார்.