அணிமாறும் நபர்களுக்கு கோடிக்கணக்கான பணம் மற்றும் அன்பளிப்புகள்

பாராளுமன்றத்தில் அணி மாறுவதற்காக தற்போது பலவேறு விதமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரியவருகிறது. ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஆதரவை பெற்றுக்கொள்வதற்காகவும் பொதுத் தேர்தலில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவும் இந்த அணி மாறும் பேச்சுவார்த்தை நடந்து வருகின்றன. அணிமாறும் நபர்களுக்கு கோடிக்கணக்கான பணம் மற்றும் வேறு அன்பளிப்புகளை... Read more »

சிவில் உடையில் போக்குவரத்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம்

சிவில் உடையில் போக்குவரத்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். நாரம்மல பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த நபரின் இறுதிக் கிரியையில் கலந்துகொண்ட நிலையில் அவர்... Read more »
Ad Widget

பாலியல் தொழிலை சட்டமாக்க எதிர்பார்க்கவில்லை

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின்கீழ் பாலியல் தொழிலை சட்டமாக்க எதிர்பார்க்கவில்லை எனவும் பொருளாதார கஷ்டங்கள் காரணமாக அந்த தொழிலில் ஈடுபடுவோரை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் சில சட்டங்கள் திருத்தப்படும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். பொருளாதார கஷ்டங்கள் காரணமாக பெண்கள் பாலியல் தொழிலில்... Read more »

பாகிஸ்தான் நடிகையை மணந்தார் கிரிக்கெட் வீரர் ஷோயிப் மாலிக்

பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் சோயிப் மாலிக் அந்நாட்டை சேர்ந்த நடிகை சனா ஜாவேதை திருமணம் செய்து கொண்டதாக இன்று அறிவித்துள்ளார். முன்னாள் கிரிக்கெட் ஆல்ரவுண்டரான சோயிப் மாலிக், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சனாவுடனான திருமண புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதேபோல் சனா ஜாவேதும் தனது... Read more »

றமேஸ் அடிகளாருக்கு இலங்கை அரசின் உயர் நிலை விருது வழங்கி கெளரவம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு கிராமத்தின் மைந்தன் அருட்தந்தை றமேஸ் (சதீஸ்குமார்) அமதி அடிகளாருக்கு கடந்த 14.01.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பு பண்டாரநாயகா சர்வதேச மாநாடு மண்டபத்தில் இடம் பெற்ற சர்வதேச மனித உரிமைகள் பாதுகாப்பு மையத்தின் (IHRM) ஏற்பாட்டில் இலங்கை அரசின் உயர்நிலை... Read more »

ஊரெழுவில் இளைஞர்கள் அதிரடி – கசிப்பு கோட்டை முற்றுகை

யாழ்ப்பாணம் – ஊரெழு கிராமத்தில் கசிப்பு குகை ஒன்று இளைஞர்களால் இன்றையதினம் முற்றுகையிடப்பட்டது. இதன் போது கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் தப்பி சென்ற நிலையில் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்திய பொருட்களும் ஒரு தொகுதி கசிப்பும் இளைஞர்களால் கைப்பற்றப்பட்டுள்ளது. இது பற்றி மேலும் தெரிய... Read more »

வரலாற்று சிறப்புமிக்க புல்லாவெளி புனித செபஸ்தியார் பெருவிழா!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரசித்தி பெற்ற புல்லாவெளி புனித செபஸ்தியார் ஆலய திருவிழா இன்று மிக சிறப்பாக இடம் பெற்றது. சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் இன்று காலை 07.00 மணியளவில் கட்டைக்காடு பங்குத்தந்தை அமல்ராஜ் அடிகளார் தலைமையில் திருவிழா திருப்பலி ஆரம்பமானதோடு திருவிழா திருப்பலியை... Read more »

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி கோவில் மகா கும்பாபிஷேக பெருவிழா

வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் மகா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு தீர்த்த கேணியில் இருந்து இன்றைய தினம் கும்பநீர் எடுத்துவரப்பட்டது கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பிரதிஷ்டா பூர்வாங்க கிரியைகள் 17.01.2024 அன்று பக்தி பூர்வமாக ஆரம்பமாகியதை தொடர்ந்து 18,19 ஆகிய தினங்களில் விஷேட,... Read more »

இந்தியாவில் சிக்கிய இலங்கை மனித கடத்தல்காரர்கள்

இலங்கைப் பிரஜைகளை 39 பேரை கனடாவுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி இந்தியாவிற்கு மனிதக் கடத்தல் செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேர் மீது இந்திய தேசிய புலனாய்வுத்துறை (என்ஐஏ) நேற்று வெள்ளிக்கிழமை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. புலனாய்வுத்துறையால் கைது செய்யப்பட்ட முகமது இம்ரான்... Read more »

ஜனாதிபதி தேர்தலுக்கு 1000 கோடி ரூபா செலவாகும் என மதிப்பீடு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு சுமார் ஆயிரம் கோடி ரூபா வரை செலவாகும் என தற்போது மதிப்பிட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதற்கு தேவையான நிதி 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்திலும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நடைமுறையில் உள்ள அரசியலமைப்புச்... Read more »