வரும் திங்கட்கிழமை பொது விடுமுறையா? வெளியான தகவல்!

பெப்ரவரி 4ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சுதந்திர தினம் கொண்டாடப்படுகின்றது. ஞாயிற்றுக்கிழமை வழமையான விடுமுறை நாளாக உள்ள நிலையில், சுதந்திர தினத்தில் விடுமுறை வழங்கப்படுவது வழமை. எனவே, சுதந்திர தின விடுமுறையானது மறுநாளான திங்கட்கிழமை( 05) வழங்கப்படுமா என்பது தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை... Read more »

இந்தியா – இலங்கை இணைப்பு மின் கட்டணத்தை குறைக்க திட்டம்

இலங்கையில் மின்சாரக் கட்டணத்தை குறைக்க கொச்சியிலிருந்து கொழும்பு வரை திரவ இயற்கை எரிவாயுக் குழாய் அமைக்கும் பணியை இந்தியா மேற்கொண்டு வருவதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்தார். இந்தியாவின் 75வது குடியரசு தினத்தையொட்டி, இந்தியா ஹவுஸில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் அவர்... Read more »
Ad Widget

வடி சாராய பிரச்சினையில் திணறும் புலனாய்வுப் பிரிவு- சாணக்கியன் கேள்வி

மாவீரர் தின நாட்களில் திறம்பட செயல்படும் புலனாய்வுப் பிரிவினர் சட்ட விரோத வடி சாராய பிரச்சனையில் திணறுவது ஏன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார். வவுணதீவு மற்றும் ஆரையம்பதி பிரதேசங்களுக்கான அபிவிருத்திக் குழு கூட்டங்கள் இன்றைய... Read more »

72 தொழிற்சங்கங்கள் நாளை போராட்டம்

சுகாதார துறை தொழிற்சங்கங்கள் நாளை (01) நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளன. அதன்படி, நாளை காலை 06.30 மணிக்கு ஆரம்பிக்கும் வேலை நிறுத்த போராட்டத்தில் 72 தொழிற்சங்கங்கள் பங்கேற்கவுள்ளன. மருத்துவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் DAT கொடுப்பனவைக் கோரி இந்த வேலைநிறுத்தம்... Read more »

சிங்கப்பூருடன் வர்த்தகத்தை விரிவுப்படுத்தும் இலங்கை

சிங்கப்பூருடன் விரிவான வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. கடந்த ஒக்டோபர் மாதம் ஜனாதிபதி செயலகம் வெளியிட்டிருந்த அறிக்கையொன்றில் சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை விரிவுப்படுத்துவது குறித்தும் தெரிவித்திருந்தது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூருக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின் போதும்... Read more »

எதிர்ப்புக்கு மத்தியிலும் களனி பல்கலைக்கு சென்ற ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வருகைக்கு எதிராக அண்மைக்காலமாக எதிர்ப்புகள் எழும்பியுள்ள போதிலும், ஜனாதிபதி இன்று (31) களனி பல்கலைக்கழகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இன்று முற்பகல் பல்கலைக்கழகத்தில் பாலி மற்றும் பௌத்த கற்கைகள் திணைக்கள வளாகத்தில் புதிய கட்டிடத்தை திறந்து வைக்கும் நோக்கில் ஜனாதிபதியின் இந்த... Read more »

பேராதனை பல்கலை. மாணவர்கள் போராட்டம்

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். வட் வரியை குறைத்தல் மற்றும் மாணவர்கள் மீதான அடக்குமுறையை நிறுத்தல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து பேராதனை மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டிருந்தனர். பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் விடுதிக்கு அருகில் ஆரம்பமான ஆர்ப்பாட்டம், கலஹா... Read more »

அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ள தலையிடி ; பணவீக்கம் அதிகரிக்கிறது

ஜனவரி மாதத்துக்கான கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CPI) மற்றும் கொழும்பு பெருநகர சமூகத்திற்கான நுகர்வோர் பணவீக்க விகிதத்தை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான கொழும்பு நுகர்வோர் பணவீக்க விகிதம் 6.4% ஆக... Read more »

மீள் கையளிக்கப்பட்ட காணிகளை மீண்டும் சுவீகரிக்கும் முயற்சி

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் மக்களிடம் மீளக் கையளிக்கப்பட்ட நிலங்களில் இருந்து 500 ஏக்கரைச் சுவீகரிக்க இரகசிய முயற்சி இடம்பெற்று வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் பிரதேச மக்கள் மேலும் தெரிவிக்கையில், “யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி என்னும் பெயரில் மேலதிக தேவைகளுக்காகத்... Read more »

உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (31) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சிறிதளவு அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 312.81 ரூபாவிலிருந்து 312.09 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதி... Read more »