உக்ரைனுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க முன்வந்துள்ள சவூதி அரேபியா

உக்ரைனுக்கு மனிதாபிமான உதவியாக 400 மில்லியன் டாலர்கள் நிதியுதவியை சவூதி அரேபியா வழங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் வெள்ளிக்கிழமை உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

இதன்போது , உக்ரைன் – ரஷியா இடையே சண்டையை முடிவுக்கு கொண்டுவர அனைத்து விதமான முயற்சிகளைத் தொடர சவூதி அரேபியா தயாராக உள்ளதாக கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருதரப்புக்குமிடையே மத்தியஸ்தம் செய்ய மற்றும் ஆதரவளிக்க தயார் எனவும் பட்டத்து இளவரசர் தெரிவித்தார். இந்நிலையில், உக்ரைனுக்கு நிதியுதவியை சவூதி அரேபியா அறிவித்துள்ளது.

Recommended For You

About the Author: webeditor