இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
கடந்த செப்டெம்பர் மாதம் இலங்கைக்கு 29802 சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளனர் எனவும், இது கடந்த ஆண்டை விடவும் 119 வீத வளர்ச்சி எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஆண்டில் ஜனவரி மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரையில் 526232 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும், கடந்த 2021ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த எண்ணிக்கையானது 1287.6 வீத வளர்ச்சி எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டெம்பர் வரையில் சுற்றுலாத்துறையின் ஊடாக ஈட்டப்பட்ட வருமானம் 946.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.