பேருந்து நடத்துனர் ஒருவர் மேற்கொண்ட இழிவான செயல்

காற்சட்டைக்குள் கமெராவை மறைத்து வைத்து பெண்களை படம் பிடித்த நபரை பிடபெத்தர பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அச் சந்தேக நபர் பேருந்து நடத்துனராக பணியாற்றியவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீண்ட கால்சட்டையின் கீழ் பகுதியில் சந்தேக நபர் இந்தக் கமெராவை பொருத்தி அதன் மூலம் அவர் பெண்களை தேவையில்லாமல் காணொளி எடுத்துள்ளமை தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பிடபெத்தர பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

மேலும் சந்தேக நபரை மொரவக்க நீதிவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor