கொரிய பிராந்தித்தில் பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமை வட கொரியா மேலும் இரண்டு ஏவுகணைகளை ஏவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏவுகணைகள் நாட்டின் தென்கிழக்கில் இருந்து ஏவப்பட்டதாக தென் கொரிய இராணுவத்தின் கூட்டுத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜப்பானிய பிரதம மந்திரி அலுவலகம் உறுதி
எங்கள் கண்காணிப்பை வலுப்படுத்தும் அதே வேளையில், அமெரிக்காவுடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் முழு தயார் நிலையில் உள்ளது என்று கூட்டுப் பணியாளர்களின் தலைவர்கள் கூறியுள்ளனர்.
தென் கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே பல நாட்கள் கூட்டு இராணுவப் பயிற்சிகள் நடந்ததைத் தொடர்ந்து, அமெரிக்க இராணுவ அச்சுறுத்தல்களுக்கு எதிர்விளைவாக, வடகொரியா ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது.
வட கொரிய ஏவுகணைகளை ஏவியமையை ஜப்பானிய பிரதம மந்திரி அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது. வட கொரியா ஒரு சந்தேகத்திற்கிடமான பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியுள்ளது என பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஜப்பானிய கப்பல்களுக்கு சேதம் ஏற்படவில்லை
ஜப்பான் கடல் என்றும் அழைக்கப்படும் கிழக்குக் கடலை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகள் ஜப்பானின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்கு வெளியே விழுந்ததாகத் தெரிகிறது என்று ஜப்பானிய அரசாங்கம் கூறியுள்ளது.
ஜப்பானிய கப்பல்களுக்கு சேதம் ஏற்பட்டதாக இதுவரை எந்த அறிக்கையும் வரவில்லை என்று கடலோர காவல்படை கூறியதாக தேசிய ஒளிபரப்பு சேவை NHK தெரிவித்துள்ளது.
முன்னதாக வியாழன் அன்று, வட கொரியா இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது. அதே நாளில் தென் கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகுளில் விமானம் தாங்கி போர்க்கப்பலி புதிய பயிற்சிகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.