கல்வி அமைச்சின் செயலாளர் CID-யில் முறைப்பாடு..!

கல்வி அமைச்சின் செயலாளர் CID-யில் முறைப்பாடு..!

கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் போது, 6-ஆம் தர பாடத்திட்ட தொகுதியில் இடம்பெறக்கூடாத விடயம் ஒன்று உள்வாங்கப்பட்டமைக்கு எதிராக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

 

வெளித்தரப்பு ஒன்றினால் சதித்திட்ட அடிப்படையில் இவ்வாறான கருத்துக்கள் உள்வாங்கப்பட்டுள்ளதாக தாம் சந்தேகிப்பதாக நாலக கலுவெவ ஊடகங்களிடம் தெரிவித்தார்.

 

இவ்வாறான முறையற்ற செயலைச் செய்த நபர்கள் குறித்து உடனடியாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

குறித்த வெளியீடு இன்னும் இறுதிப் பதிப்பாக அச்சிடப்படவில்லை என்றும், இதன் பொறுப்பு கல்வித் திணைக்களத்தையே சாரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

இந்த சர்ச்சைக்குரிய பகுதி சட்டபூர்வமாக வெளியிடப்படவில்லை என்பதையும், பாடத்திட்டத்தில் இது எவ்விதத்திலும் உத்தியோகபூர்வமாக உள்வாங்கப்படாது என்பதையும் செயலாளர் கலுவெவ உறுதிப்படுத்தினார்.

Recommended For You

About the Author: admin