யாழ் மாவட்டத்தில் 63 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது!

யாழ். மாவட்டத்தில் 63 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட பாவனையாளர் அலுவலர்கள் அதிகார சபையின் பொறுப்பதிகாரி ந.விஜிதரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “கடந்த செப்டெம்பர் மாதம் யாழ். மாவட்டத்தில் 63 வர்த்தகர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்தோடு, 25 இலட்சத்து 74 ஆயிரத்து 500 ரூபா தண்ட பணம் அறவிடப்பட்டுள்ளது.

குற்றங்கள்
வர்த்தக நிலையங்களில் பொருட்களின் விலையினை காட்சிப்படுத்த தவறியமை,

அரசினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையினை மீறி பொருட்களை பொதுமக்களுக்கு விற்பனை செய்தமை,

உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களின் விபரங்கள் இல்லாது பொருட்களை காட்சிப்படுத்தியமை மற்றும் விற்பனை செய்தமை,

காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை மற்றும் காட்சிப்படுத்தியமை,

நுகர்வோரை ஏமாற்றும் நோக்கத்துடன் பொருட்கள் மீது பொறிக்கப்பட்ட விலையினை மாற்றி புதிய விலையினை குறித்தமை,

இலத்திரனியல் பொருட்களுக்கு குறைந்தபட்ச 6 மாத உத்தரவாத காலம் வழங்க தவறியமை,

அரச தரச்சான்றுதல் பொறிக்கப்படாத பொருட்களை விற்பனை செய்தமை, காட்சிப்படுத்தியமை போன்ற குற்றங்களுக்காக வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியான தேடுதல்
தொடர்ச்சியாக யாழ். மாவட்ட பாவனையாளர்கள் அலுவலர்கள் அதிகார சபையின் உத்தியோகத்தர்களினால் தேடுதல்கள் மற்றும் கண்காணிப்பு விஜயங்கள் மேற்கொள்ளப்பட்டு பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படுத்தும் விதமாக செயற்படும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

எனவே யாழ். மாவட்டத்திலுள்ள வர்த்தகர்கள் விதிமுறைகளுக்கு அமைய தமது வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்”என தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor