உள்ளக விளையாட்டரங்கை வலி கிழக்கில் அமைப்பதற்கு காணி உள்ளிட்ட சகலஒத்துழைப்பையும் வழங்க தயார்..!
தவிசாளர் தியாகராஜா நிரோஷ் யாழ்ப்ப்பணத்தில் அமையவுள்ள உள்ளக விளையாட்டு அரங்கினை வலிகாமம் கிழக்குப் பிரதேசத்தில் அமைப்பதே பொருத்தமானது.
இதற்கு எமது சபையிடம் வளங்கள் காணப்படுகின்றன.
அதேவேளை நிலங்களை வழங்கவும் எமது பிரதேசத்தில் பலர் முன்வந்துள்ளனர். எனவே இயற்கைச் சுழலைப் பாதிக்காமல் அரசாங்கம் சரியான முடிவினை எடுக்கவேண்டும் என பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.


