வடமாகாண கல்வி திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட சேவையின் தேவை கருதிய இடமாற்றம் 2026 முறையற்றது என இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் யாழ்ப்பாணம் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று (16) கெளரவ நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, இடமாற்றம் வழங்கப்பட்டிருந்த அனைத்து ஆசிரியர்களின் இடமாற்றங்களையும் மீறப்பெறுவதாக எதிராளிகள் சார்பில் முன்னிலையாகியிருந்த அரச சட்டத்தரணி கெளரவ மன்றுக்கு தெரியப்படுத்தியதையடுத்து குறித்த வழக்குகள் இன்று முடிவுக்கு கொண்டுவரப்பட்டுதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

