தொழிநுட்ப கோளாறுக்கு உள்ளான விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கம்..!

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்க திட்டமிடப்பட்ட துருக்கி நோக்கி பயணித்த விமானம், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

202 பயணிகளுடன் துருக்கியின் இஸ்தான்புல் நோக்கிப் புறப்பட்ட குறித்த விமானத்தில், பயணத்தின் போது திடீரெனத் தொழில்நுட்பக் கோளாறு அவதானிக்கப்பட்டது.

இதனையடுத்து, விமானம் உடனடியாகத் திருப்பப்பட்டு, வானில் சில மணித்தியாலங்கள் வட்டமடித்த நிலையில், அவசரகால ஏற்பாடுகளுக்கு மத்தியில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது.
பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Recommended For You

About the Author: admin