மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள முன்னம்போடிவெட்டை பகுதியில் வைத்து,உமி ஏற்றிக் கொண்டு பயணித்த லொறியொன்று பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் வாகனச் சாரதி மாத்திரமே பயணித்துள்ளதுடன் அவர் தெய்வாதீனமான முறையில் காயங்களின்றி உயிர் தப்பியுள்ளார்.
திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று புதன்கிழமை (17.12.2025) அதிகாலை இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கல்முனையிலிருந்து திருகோணமலைக்கு உமி ஏற்றிக்கொண்டு பயணித்தே லொறியே இந்த அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளது.
சாரதியின் தூக்கமே குறித்த விபத்துக்கான காரணமென தெரியவருகிறது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளில் மூதூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

