கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளில் சுமார் 3500 குடும்பங்களுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை வரை 25 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ் முரளிதரன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் நாட்டில் ஏற்பட்ட வெள்ளப் பேரிடர் காரணமாக கிளிநொச்சி மாவட்டமும் பாதிக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான கொடுப்பனவுகள் துரித கதியில் வழங்கப்பட்டு வருகிறது.
கிளிநொச்சி மாவட்டத்தை பொறுத்தவரையில் சுமார் 6000 கால்நடைகள் இறந்துள்ள நிலையில் அதற்கான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் வன்னிப் பகுதியில் மழை வீழ்ச்சி கிடைத்து வருவதால் பூட்டப்பட்ட இரணை மடுக் குளத்தின் 8 வான் கதவுகள் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்படுகிறது.
இனிவரம் நாட்களில் கிடைக்கப்படுகின்ற மழை வீழ்ச்சியை பொறுத்து திறக்கப்பட் கதவுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதாக குறைப்பதா என்பது தொடர்பில் தீர்மானிக்க முடியும் என மேலும் தெரிவித்தார்

