சகோதரிகளே அவதானம்‼️ பிரபல உள்ளாடை கடை ஒன்றில், உடை மாற்றும் அறையில் நூதனமான முறையில் ‘கரண்ட் பிளக்’ ஒன்றினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கெமரா கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட இடத்தில் உடை மாற்ற சென்ற பெண்ணொருவர் சந்தேகத்துக்கிடமான இதனை அடையாளம் கண்டுள்ளார் பின்னர் தைரியமான முறையில் தட்டிக்கேட்டதுடன், முறைப்பாடும் செய்துள்ளார்.
இதனடிப்படையில், தலங்கம பொலிஸாரினால் குறித்த கடை உரிமையாளர் மற்றும் அவரது கூட்டு சகாக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், இது நீண்டகாலம் நடைப்பெற்று வந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
விசாரணையின் போது, குறித்த நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.
சகோதரிகளே அவதானம் – இப்படியான இடங்களில், அவதானமாக இருங்கள் – சந்தேகம் இருந்தால் தைரியமாக குரல் கொடுங்கள்!!

