முட்டை விலை மீண்டும் அதிகரிப்பு
நாட்டில் ஏற்பட்ட அதிதீவிர வானிலையில் சிக்கி முட்டை இடும் கோழிகள் மட்டும் 28 இலட்சத்துக்கும் அதிகமானவை உயிரிழந்துள்ளன. இது தமக்கு மிகவும் கவலை அளிப்பதாக அகில இலங்கை முட்டை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டார்.
இலங்கை மக்களுக்கு ரூ.26-27 இற்கு வழங்க வேண்டிய முட்டை திடீரென ரூ. 45-50 ஆக அதிகரித்திருப்பது வருத்தமளிக்கிறது. ஆனால் இதைத் தவிர வேறு எதுவும் செய்ய வழியில்லை.
கிறிஸ்துமஸ் நெருங்கும் காலத்தில் இதன் தேவை மேலும் அதிகரிக்கும்.
மிகப்பெரிய முட்டை நெருக்கடியை நாம் எதிர்கொள்ள நேரிடும் என தெரிவித்தார்.

