புதிதாக இரண்டு லட்சம் இராணுவ வீரர்களை இணைத்துக்கொள்ளும் ரஷ்யா!

இராணுவ அணி திரட்டலுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அழைப்பு விடுத்திருந்த நிலையில், தற்போது இரண்டு லட்சம் பேர் புதிதாக இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. புதிதாக நியமிக்கப்பட்டுள்ளவர்களுக்கு 80 பயிற்சி மைதானங்கள் மற்றும் ஆறு பயிற்சி மையங்களில் பயிற்சி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ அணி திரட்டலுக்கு உத்தரவு
முறையான பயிற்சியின் பின்னரே போர் களத்திற்கு அவர்களை அனுப்ப முடியும் என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இராணுவ ஆட்சேர்ப்பு மையங்களுக்கு வரும் தன்னார்வலர்களிடம் இராணுவத்தில் சேராமல் இருப்பதற்கான முக்கியமான காரணங்கள் இல்லாவிட்டால், அவர்களைத் திருப்பி அனுப்ப வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், தற்போது ரஷ்ய படையினர் தற்போது பின்வாங்கியுள்ளது. இந்நிலையில் படையினரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இராணுவ அணி திரட்டலுக்கு உத்தரவிட்டுள்ளார்.

நாட்டை விட்டு தப்பியோடும் ரஷ்யர்கள்
இதன்படி, தாய்நாட்டுக்காக பொதுமக்கள் இராணுவத்தில் சேர வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வரப்பட்டதுடன், கடந்த 21ம் திகதி அதற்கான அறிவிப்பை ரஷ்ய ஜனாதிபதி வெளியிட்டிருந்தார்.

மேலும், இந்த அறிவிப்பு வெளியானதும் பலர் தங்கள் நாட்டை விட்டு வெளியேற முடிவெடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

ரஷ்யாவின் அண்டை நாடுகளான போலாந்து, பின்லாந்து, உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான் மற்றும் பிற மத்திய ஆசிய நாடுகளுக்கும் சுற்றுலா விசாக்களை பயன்படுத்தி ரஷ்ய நாட்டவர்கள் அதிகமானோர் செல்லத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor