வடக்கு, கிழக்கு கடற்கரையை நெருங்கும் புதிய தாழமுக்கம்: மக்கள் அவதானமாக இருக்க அறிவுறுத்தல்!
நாட்டின் மீது நிலைகொண்டிருந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் (தாழமுக்கம்) விலகிச் செல்வதால், வானிலையில் அதன் தாக்கம் படிப்படியாகக் குறைந்து வருகின்றது.
எனினும், நவம்பர் 22ஆம் திகதி அளவில் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஒரு புதிய குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாக வாய்ப்புள்ளது.
இந்தக் குறைந்த அழுத்தப் பிரதேசம் மேலும் வலுவடைந்து, இலங்கையின் வடக்குக் கடற்கரையை அண்மித்து நகர்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
எனவே, கடற்படை மற்றும் மீனவச் சமூகங்கள், அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் பொது மக்கள் அனைவரும், இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்படும் எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் அறிக்கைகள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

