உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்..!
2025 ஆம் ஆண்டு உலக நீரிழிவு தினத்தை (நவம்பர் 14) முன்னிட்டு, இலங்கை நீரிழிவு சம்மேளனம் நாளை (15) சமூக நலன்புரித் திட்டம் ஒன்றை செயற்படுத்தவுள்ளது.
இதன்படி, நாளை காலை 6.30 மணிக்கு நீரிழிவு நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு நடைபவனி கொழும்பு பொது நூலக வளாகத்தில் இருந்து ஆரம்பமாகவுள்ளது.
அதனைத் தொடர்ந்து, காலை 7.30 மணி முதல் கொழும்பு மாநகர சபை மைதானத்தில் மருத்துவ முகாம் உள்ளிட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த அனைத்துச் செயல்பாடுகளும் இலவசமாக இடம்பெறவுள்ளதாக இலங்கை நீரிழிவு சம்மேளனம் தெரிவித்துள்ளது.

