சாவகச்சேரி பிரதேசசபையின் சுகாதார தொழிலாளர்களுக்கு உதவித்திட்டம் வழங்கி கௌரவிப்பு..!
சாவகச்சேரிப் பிரதேசசபையில் கடமையாற்றுகின்ற 30 சுகாதாரத் தொழிலாளர்களுக்கு வெள்ளிக்கிழமை( 07.11.2025) பிற்பகல் உதவிப் பொருட்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
நாவற்குழி கிழக்கு கைதடியைச் சேர்ந்த சமாதான நீதவான் அமரர் வை.சரவணமுத்துவின் 41ஆவது ஆண்டு நிறைவினையொட்டி அவருடைய பிள்ளைகளால் உபதவிசாளர் யோகேஸ்வரனின் ஏற்பாட்டில் மேற்படி செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி கௌரவிப்பு மற்றும் உதவித்திட்டம் வழங்கும் நிகழ்வில் சாவகச்சேரிப் பிரதேசசபைத் தவிசாளர் பொ.குகதாசன்,உப தவிசாளர் இ.யோகேஸ்வரன்,சபையின் உத்தியோகத்தர்கள்,ஊழியர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

