ஹம்பாந்தோட்டையில் விலங்குகள் மற்றும் பறவைகளுக்கான பாதுகாப்பு நிலையம் திறந்து வைப்பு!

ஹம்பாந்தோட்டை – ரிதியகம சபாரி பூங்காவின் இரண்டாம் கட்டத்திற்கு சொந்தமான மினி விலங்கு வலயம், விலங்குகள் பாதுகாப்பு மற்றும் இடம்பெயர்ந்த பறவைகள் மீட்பு நிலையம் நாளைய தினம் திறந்து வைக்கப்படவுள்ளது.

சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பில், இந்த நிலையம் திறக்கப்படவுள்ளதாகவும், பல்வேறு வகையான விலங்குகளுக்காக 13 வலயங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயம், வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

தற்போது, ​​சுமார் 200 ஏக்கர் காணி அபிவிருத்தி செய்யப்பட்டு, நிர்வாக கட்டிடங்கள், கால்நடை மருத்துவமனை, பார்வையாளர் வசதிகள், கடைகள், வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் பல விலங்கு மண்டலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

விலங்கு மண்டலங்கள்
இந்த விலங்கு மண்டலங்கள் சுமார் 35 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட ஆப்பிரிக்க சிங்க மண்டலம் என்றும், 80 ஏக்கர் பரப்பளவில் உள்ள தாவரவகை விலங்குகள் மண்டலம் என்றும், 54 ஏக்கர் ஆசிய யானை மண்டலம் மற்றும் வங்காளப் புலி மண்டலம் என்றும் வகுக்கப்படுள்ளது.

இதில் மூன்று மண்டலங்களைக் கொண்ட உத்தேச கட்டமே நாளை திறக்கப்பட உள்ளது. மான்கள் , காட்டு அல்லது வயல் எலிகள் போன்ற சிறிய தாவரவகை விலங்குகளுக்கு ஒரு மண்டலம் உள்ளது மற்றும் குழந்தைகள் செல்லப்பிராணிகளுடன் வேடிக்கை பார்ப்பதற்கான மண்டலமும் இந்த புதிய பிரிவில் கட்டப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, விலங்குகள் வளர்ப்பு பாதுகாப்பு மையமும் அமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களுக்காக அந்த பகுதி திறக்கப்படாது. இங்கு புலம்பெயர் பறவைகளுக்காக சிறப்பு மீட்பு மையம் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை செல்லப்பிராணிகளுக்கு உணவளிப்பது மற்றும் விலங்குகளுடன் புகைப்படம் எடுப்பது போன்ற வாய்ப்புகளுக்கு, இங்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor