சாவகச்சோியில் குமரப்பா மற்றும் புலோந்திரன் நினைவுத் தூபியை மீளவும் அமைக்க நடவடிக்கை..!

சாவகச்சோியில் குமரப்பா மற்றும் புலோந்திரன் நினைவுத் தூபியை மீளவும் அமைக்க நடவடிக்கை..!

சாவகச்சேரியில் வீதியோரத்தில் இருந்த நிலையில் இடித்தழிக்கப்பட்ட குமாரப்பா புலேந்திரன் உள்ளிட்டவர்களின் நினைவுத்தூபியை மீளவும் புனரமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் ஞா.கிஷோர் தெரிவித்துள்ளார்.

வீதியில் இருந்து 4 அடிகள் தூரத்திலும், தனியார் காணியின் எல்லைக்கு வெளியே குமாரப்பா புலேந்திரன் உள்ளிட்டவர்களின் நினைவுத்தூபி இருந்தது.

 

தனது காணியை பிரித்து விற்பனை செய்யும்போது அந்த இடத்தில் வாசல் வரும் என்ற காரணத்திற்காக சுயநலநோக்குடனே இந்த நினைவுத்தூபி இடிக்கப்பட்டது.

 

குமாரப்பா புலேந்திரன் உட்பட்ட, தென்மராட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய பல போராளிகளின் உருவப்படங்கள் இந்த தூபியில் இருந்ததாக கூறப்படுகிறது.

 

இந்த தூபியை உடைத்தவர் அதனை மீண்டும் கட்டித்தருவதாக கூறியிருந்தார். ஆனால் இதுவரை எந்தவிதமான வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படவில்லை.

 

பொதுமக்களுக்கோ அல்லது தனியாரின் காணிக்கோ இடையூறு இல்லாமலேயே அந்த தூபி அமைந்திருந்தது. அந்த தூபியானது மீண்டும் கட்டப்பட வேண்டும்.

 

எங்களுடைய இனத்தின் நினைவுகள் எதிர்கால சந்ததியிடம் கொண்டு செல்லப்பட வேண்டும். ஆகவே இந்த தூபியை புனரமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் மேற்கொண்டிருக்கின்றோம் என்றார்.

Recommended For You

About the Author: admin