பற்றி எரியும் டாக்கா விமான நிலையம்..

பற்றி எரியும் டாக்கா விமான நிலையம்.. சென்னை-வங்கதேச விமான சேவை பாதிப்பு பயணிகள் அவதி!

வங்கதேச தலைநகர் டாக்கா விமான நிலையத்தில் கடும் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக டாக்கா விமான நிலையும் முற்றிலும் முடங்கியுள்ளது. விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.

விபத்தை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டிருக்கின்றனர். இருப்பினும் தீ வேகமாக பரவி வருவதால் அதை கட்டுப்படுத்துவதில் கடும் சவால் ஏற்பட்டிருக்கிறது. தீ விபத்து காரணமாக சென்னை-டாக்கா விமான சேவை பாதிக்கப்பட்டிருக்கிறது.

தீ விபத்து குறித்து உள்ளூர் செய்தி ஊடகங்கள் தெரிவித்திருப்பதாவது, “டாக்காவின் ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தின் சரக்குப் பிரிவில் இன்று பிற்பகல் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இச்சம்பவத்தால் அனைத்து விமானச் சேவைகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த தீ விபத்து மதியம் 2:15 மணியளவில் நிகழ்ந்தது. விமான நிறுவன செய்தித் தொடர்பாளர் கவ்சர் மஹ்மூத் இதை உறுதிப்படுத்தினார்.

தீ விபத்து ஏற்பட்ட உடனேயே, விமான நிலையத்தின் தீயணைப்புப் பிரிவினர், பங்களாதேஷ் விமானப்படை தீயணைப்புப் பிரிவினர் மற்றும் பிற வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துடன்

அவர்கள் இணைந்து செயல்பட்டு, தீயைக் கட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்” என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இது தொடர்பான கூடுதல் தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இது இவ்வாறிருக்க பாகிஸ்தான் திடீரென நடத்திய வான்வெளி தாக்குதலில், ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 3 இளம் கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிரடி முடிவை எடுத்துள்ளது.

ஆப்கானிஸ்தான் நாடுகள் இடையே எல்லையில் கடந்த சில மாதங்களாகவே மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. இந்த பிரச்சனையால் ஆப்கானில் உள்ள டிடிவி தாலிபான் அமைப்புடன், பாகிஸ்தான் ராணுவம் நேரடியாக மோதலில் இறங்கியது. ஒருகட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் போர் விமானங்கள் மூலம் தாக்குதலில் இறங்கியது. இதில் டிடிவி தாலிபான் அமைப்பைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் ஆப்கானிஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க ஆப்கானிஸ்தான் முடிவு செய்தது. அதன்படி கடந்த வாரம் திடீரென பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து, சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தி, ராக்கெட் குண்டுகளை வீசினார்கள்.

ஆப்கானின் இந்த தாக்குதலில், பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த 58 வீரர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.

பாகிஸ்தானின் விமானப்படையை தாக்கியதாக ஆப்கானிஸ்தான் கூறியது. மறுபக்கம் பாகிஸ்தான் தாக்குதலில், ஆப்கானில் சில பொது மக்களும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கத்தார், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

போர் நிறுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் சிறிது நேரத்திலேயே பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையே மீண்டும் எல்லையில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அந்த நாட்டு ராணுவ உடைகளுடன் சுற்றுவது, அவர்களின் போர் வாகனத்தை ஊருக்குள் ஓட்டுவது போன்ற வீடியோ வெளியிடும் செயலில் ஆப்கானிஸ்தான் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டின் உர்குன் மாவட்டத்தில், பாகிஸ்தான் திடீரென வான்வழி தாக்குதலில் ஈடுபட்டது. இந்த தாக்குதலில் ஆப்கானிஸ்தான் நாட்டின் இளம் கிரிக்கெட் வீரர்கள் கபீர், சிப்கத்துல்லா, ஹாரோன் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். அவர்களுடன் 7 பொதுமக்கள் உள்பட மொத்தம் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 7 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவத்தால் ஆப்கானிஸ்தானில் பதற்றமான சூழல் ஏற்பட்டு வருகிறது. பாகிஸ்தானுக்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம், தாலிபான் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

கிரிக்கெட் வீரர்கள், உள்ளூரில் நடந்த போட்டிக்கு பிறகு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக ஆப்கான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் அடுத்த மாதம், பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் – இலங்கை நாடுகள் முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் விளையாட திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் பாகிஸ்தான் நடவடிக்கையால் முத்தரப்பு தொடரை புறக்கணிப்பதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

பாகிஸ்தானின் நடவடிக்கைக்கு ரஷீத்கான் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin