யாழில். இரண்டாவது நாளாக தொடரும் ஆசிரியர்களின் போராட்டம்..!

யாழில். இரண்டாவது நாளாக தொடரும் ஆசிரியர்களின் போராட்டம்..!

ஆசிரியர் இடமாற்ற கொள்கையை சரியான முறையில் நடைமுறைப்படுத்துமாறும், கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக கஷ்டப் பிரதேசம் மற்றும் அதி கஷ்டபிரதேசங்களில் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கான இடம் மாற்றங்கள் சரியான முறையில் வகுக்கப்படவில்லை என கூறி வடமாகாண ஆசிரியர்கள் நேற்றைய தினம் திங்கட்கிழமை முதல் வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் நேரில் சென்று சந்தித்து ஆசிரியர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து கொண்டனர்.

ஆசிரியர்களால் முன் வைக்கப்பட்ட பிரச்சனைகள் குறித்து தாம் வடமாகாண ஆளுநருடன் பேசி தீர்வுகளை பெற்று தருவதாக ஆசியர்களுக்கு உறுதி அளித்தனர்.

Recommended For You

About the Author: admin