யாழ்ப்பாண தம்பதியும் இஷாரா செவ்வந்தியுடன் கைது..! பொலிஸார் வெளியிட்ட தகவல்.

யாழ்ப்பாண தம்பதியும் இஷாரா செவ்வந்தியுடன் கைது..!
பொலிஸார் வெளியிட்ட தகவல்.

கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபராக தேடப்பட்டு வந்த இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இஷாரா செவ்வந்தியுடன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தம்பதி உட்பட மேலும் ஐந்து பேரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதானவர்களில் கம்பஹா மற்றும் நுகேகொட பகுதிகளை இருவர் மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தம்பதியும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேபாள பாதுகாப்புப் படையினர், குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் பொலிஸார் இணைந்து நடத்திய சிறப்பு நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காத்மாண்டுவிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதியிலுள்ள வீடொன்றில் தலைமறைவாக வாழ்ந்து வந்த நிலையில் கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்கள் நாளையதினம் இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin