கர்ப்பிணிப் பெண்களுக்கான பிரசவகாலப்பொதி வழங்கல்..!
பெரண்டீனா லயிப் லைன் நிறுவனத்தின்(Berendina Micro Investments Company Limited) அனுசரனையில் கர்ப்பிணிப் பெண்களுக்கான பிரசவகாலப்பொதி யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் இன்றையதினம் (2025.10.13 ) காலை 11.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போா் கூடத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட அரசாங்க அதிபர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் கர்ப்பிணிப் பெண்களுக்கான பிரசவகாலப்பொதி வழங்கி வைத்த பெரண்டீனா லயிப் லைன் நிறுவனத்திற்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டதுடன் இவ் உதவித்திட்டத்தை சரியான வகையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்துடன், இதன்நோக்கம் கர்ப்பிணிகளும் அவர்களின் கருவிலுள்ள குழந்தையும் ஆரோக்கியமாக இருப்பதற்காகவே இப்பொதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்ததோடு அரசாங்கத்தாலும் கர்ப்பிணிகளுக்கு உணவுமுத்திரைகள் வழங்கப்படுவதன் நோக்கம் கர்ப்பிணிப் பெண்களும் அவர்களின் கருவில் வளரும் குழந்தையும் ஆரோக்கியத்துடன் இருப்பதனூடாக இவ் சமுதாயத்தை உடல்,உளஆரோக்கியமான சமுதாயமாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதே ஆகும் எனவும் தெரிவித்து எல்லோரும் ஒன்றிணைந்து நோக்கத்தை உணர்ந்து ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டாா்.
யாழ்ப்பாணம், நல்லூா், கோப்பாய் , சாவகச்சேரி ஆகிய பிரதேச செயலகங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 20 கர்ப்பிணிப் பெண்களுக்கு பத்தாயிரம் ரூபா பெறுமதியான பிரசவ காலப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் பெரண்டீனா லயிப் லைன் நிறுவனத்தின் வடமாகாண பிரதேச முகாமையாளர் மற்றும் சுன்னாகம் கிளை முகாமையாளர் மாவட்ட பெண்கள் அபிவிருத்திப்பிரிவின் இணைப்பாளர், கர்ப்பிணிப் பெண்கள் ஆகியோா் கலந்து கொண்டனர்.


