மின் வெட்டு தொடர்பான அறிவிப்பு!

மின்வெட்டு தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

இன்றைய தினம்(03) இரண்டு மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

மின்வெட்டு நேரம்

இதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் பகலில் ஒரு மணி நேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தீர்மானம்
நுரைச்சோலை அனல்மின் உற்பத்தி நிலையத்தின் மின்பிறப்பாக்கி இயங்க ஆரம்பித்தாலும் மின்வெட்டு நேரத்தைக் குறைக்க முடியாது என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 2 மணி நேரம் 20 நிமிடங்கள் என்ற மின்வெட்டு தொடரும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் 3ஆம் மின் பிறப்பாக்கியில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டு, மீண்டும் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் காலப்பகுதி குறையலாம் என தகவல்கள் வெளியாகின.

இந்நிலையிலே மின்வெட்டு நேரத்தைக் குறைக்க முடியாது என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: webeditor