சர்வதேச சிறுவர் மற்றும் முதியோா் தினம்..!
2025 ஆண்டிற்கானசிறுவர் தினமானது “உலகை வழிநடாத்த அன்பால் போஷியுங்கள்” என்னும் தொனிப்பொருளில் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.கயிலாசபிள்ளை சிவகரன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் 04.10.2025 ஆம் திகதி சனிக்கிழமை மு. ப 10.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், வாழ்நாள் பேராசிரியருமான பொன். பாலசுந்தரம்பிள்ளை அவர்களும், சிறப்பு விருந்தினராக திரு.ந.ஸ்ரீசரவணபவானநந்தன் (யாழ் போதனா வைத்தியசாலை குழந்தை நல வைத்திய நிபுணர்) அவர்களும் பங்குபற்றி சிறப்பித்தனர்.
இந் நிகழ்வில் வரவேற்பு நடனம், பாட்டு (தெல்லிப்பழை முதியோர் சங்கம்) மொழிப்புலமை திறனை வெளிப்படுதத்தல், நடனம், ஒயிலாட்டம் (உதயதாரகை சிறுவர் இல்லம்) நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன.
மேலும், விருந்தினர்களுடன் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களும் இணைந்து முதியோர் சுயதொழில் பயனாளிகள் மற்றும் வெற்றி பெற்ற முதியோர் சங்கங்கள் கௌரவிக்கப்பட்டதுடன்
சிறுவர்கள், முதியோா்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் மாவட்ட பிரதம கணக்காளர்,மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர், அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப்பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர், மனித உரிமைகள் ஆணையாளர், பிரதேச செயலாளர்கள் உதவி பிரதேச செயலாளர்கள், மாவட்ட, பிரதேச செயலக சிறுவர், முதியோர் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், சிறுவர்கள், முதியோா்கள் கலந்துகொண்டனர்.


