கைதடி ஊரியான் வீதி புனரமைப்புக்காக தற்காலிகமாக மூடப்படுகிறது..!
கைதடி ஊரியான் வீதியானது வீதி புனரமைப்பு பணிகளுக்காக எதிர்வரும் 06.10.2025 தொடக்கம் மறுஅறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்படவிருப்பதாக சாவகச்சேரிப் பிரதேசசபைத் தவிசாளர் பொ.குகதாசன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;
வடமாகாணசபைக்கு அருகாமையில் செல்லும் ஊரியான் வீதி ஏ9வீதிப் பக்கமாக தற்காலிகமாக மூடப்படவிருப்பதால் அவ் வீதியின் பயன்பாட்டாளர்கள் கோப்பாய்-கைதடி வீதியின் ஊடாக ஊரியான் வீதியை பயன்படுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

