கைதடியில் இடம்பெற்ற அஞ்சல் அலுவலகத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு..!
தென்மராட்சி கைதடியில் புதிய அஞ்சல் அலுவலகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு வைபவம் (02.10.2025) வியாழக்கிழமை பிற்பகல் இடம்பெற்றிருந்தது.
28 மில்லியன் ரூபாய் செலவில் இந்த புதிய அஞ்சல் அலுவலகத்திற்கான கட்டடம் அமைக்கப்படவுள்ள நிலையில்
கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன், அஞ்சல் மா அதிபர், தென்மராட்சி பிரதேச செயலர் ஆகியோர் புதிய கட்டடத்திற்கான அடிக்கற்களை நாட்டி வைத்திருந்தனர்.


