மஹிந்தவின் பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சி எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில்!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் முன்னாள் பிரதம பாதுகாப்பு அதிகாரியான நெவில் வன்னியாராச்சி எதிர்வரும் ஒக்டோபர் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இன்று முற்பகல், இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றி விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் (CIABOC) வாக்குமூலம் அளிப்பதற்காக வன்னியாராச்சி ஆஜரானார்.
வாக்குமூலத்தின் பின்னர் அவர் கைது செய்யப்பட்டு கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
ரூபா 28 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான சொத்துக்களையும் உடைமைகளையும் அவர் எவ்வாறு ஈட்டினார் என்பதை வெளியிடத் தவறியமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் அவர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

