தாஜுதீனின் கொலைக்கு இவர்களே முழுமையான பொறுப்பு..! அம்பலப்படுத்தும் அநுர அரசு
முன்னாள் ரக்பி வீரர் வாசிம் தாஜுதீனின் கொலை போன்ற குற்றங்களை கிராமத்தில் உள்ள சிறிபால அல்லது ஞானரத்னம் செய்யவில்லை, மாறாக நாட்டை ஆண்ட ஆட்சியாளர்களே செய்தனர் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க (Bimal Ratnayake) தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “விசாரணைகளின்படி குற்றங்களில் தொடர்புடையவர்கள் அரசியல் ஆர்வலர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
இந்தக் குற்றங்களை நாட்டை ஆண்ட ஆட்சியாளர்களே செய்தார்கள். அவர்கள் அன்று குற்றங்களை மூடி மறைத்தனர்.
வாசிம் தாஜுதீன் 2012 இல் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் யாராயினும் சட்டம் செயற்படுத்தப்படும்.
இந்தக் குற்றம் தொடர்பான விசாரணைகளில் அரசு தலையிடாது என்றார்.

