வடக்கு மாகாணத்தில் ஹெரோயின் போதைப்பொருள் பாவனை திடீரென அதிகரித்தமை மிகவும் கவலையளிக்கின்றது என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
வடக்கில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை
“நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் விற்பனையாளர்களையும், பாதாள உலகக் குழுவினரையும் தேடிக்கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் மற்றும் முப்படையினர் களமிறங்கியுள்ளனர்” எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருளை விற்பனை
இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,
“வடக்கில் ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்பவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும்.
முதலில் போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால்தான் போதைப்பொருள் பாவனையை முடிவுக்குக் கொண்டுவர முடியும்” எனவும் தெரிவித்துள்ளார்.