உற்பத்தித் திறன் மூலம் வளமான கிராமம்

உற்பத்தித் திறன் மூலம் வளமான கிராமம் – வடமாகாண உற்பத்தித்திறன் உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு..!

உற்பத்தித் திறன் மூலம் வளமான கிராமம் – சமூக உற்பத்தித் திறன் மாதிரி கிராமத் திட்டம் – வடமாகாண உற்பத்தித் திறன் உத்தியோகத்தர்களுக்கானசெயலமர்வானது மேலதிக அரசாங்க அதிபர் திரு கே சிவகரன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (24.09.2025) காலை 09.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

 

இச் செயலமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த மேலதிக அரசாங்க அதிபர் அவர்கள் அரசாங்கத்தின் கொள்கைத் திட்டத்திற்கு வளமான நாடு – செழிப்பான பிரதேசத்தினை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கிளீன் ஸ்ரீலங்கா தேசியத் திட்டத்தின் கீ‌ழ் இலங்கை முழுவதும் சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராமங்களை உருவாக்குவதற்காக முதற்கட்டமாக ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவில் ஒரு கிராமத்தை தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான மூன்றாண்டு செயற்பாட்டுத் திட்டத்தினை தயாரிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும் தெரிவு செய்யப்பட்ட கிராமத்தில் கல்வி, பொருளாதாரம், சுகாதாரம் மற்றும் உடல்நலம், வீட்டு முகாமை மற்றும் சமூக நல்வாழ்வு, கலாசார மற்றும் ஆன்மீக அபிவிருத்தி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றின் ஊடாக அக் கிராமங்களை உற்பத்தித் திறன் ஊடக அபிவிருத்தி செய்வதே நோக்கமானது எனத் தெரிவித்துடன், வறுமை ஒழிப்பு மற்றும் டியிற்றல் மயமாக்கலையும் உள்ளடக்கியவகையில் உற்பத்தித் திறன் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புக்களை சிறப்பாக நிறைவேற்றி ஒத்துழைப்பு நல்குமாறும் மேலதிக அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டார்.

 

இத் திட்டத்தின் நோக்கத்தினை உற்பத்தித் திறன் செயலகத்தின் உதவிப் பணிப்பாளர் தர்ஷினி ரணசிங்க அவர்களால் விபரிக்கப்பட்டது.

 

இச் செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, யாழ்ப்பாண மாவட்ட உற்பத்தித் திறன் இணைப்பாளர் திரு. எஸ். பிரசாத் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட உற்பத்தித் திறன் இணைப்பாளர் திரு. ஆர். புவனேந்திரன் ஆகியோரும் பங்குபற்றினார்கள்.

 

இச் செயலமர்வில் வடமாகாணத்தினைச் சேர்ந்த உற்பத்தித் திறன் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டார்கள்.

Recommended For You

About the Author: admin