கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கைதடி அரச சித்த மருத்துவ சங்கத்தினர்..!
பல்வேறு கோரிக்கைகளை அரசாங்கத்திடம் முன்வைத்து இன்று புதன்கிழமை(24.09.2025) மதியம் அரச சித்த மருத்துவ அதிகாரிகள் சங்கம் கைதடியில் அமைந்துள்ள சித்த போதனா வைத்தியசாலை முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தது.
இதன்போது இடைக்கால மேலதிக நேர கொடுப்பனவை நிறுத்தியமைக்கான காரணம் என்ன?,
ஆயுர்வேத வைத்திய சேவையில் சம்பள ஏற்றத்தாழ்வை உடனடியாக நிறுத்து,சம்பள மறுசீரமைப்பு எங்கே? “ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


